For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்டனை முடிந்து திரும்பிய தந்தை.. ஆன்லைன் வகுப்புக்காக சிறையில் சம்பாதித்த காசில் மகளுக்கு செல்போன்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு வீடு திரும்பிய தந்தை, மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறையில் சம்பாதித்த பணத்தில் செல்போன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டு குடும்பத் தகராறால் தாய்மாமாவை கொலை செய்தவர் நாகேஷ்யா (40). இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நன்னடத்தை காரணமாக 15 ஆண்டுகள் கழித்து இவர் விடுதலை ஆகினார்.

சிறைக்கு செல்லும் போது ஒரு வயது மகள் யாமினியை இத்தனை ஆண்டுகள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்தார். வீட்டுக்கு சென்றார்.

5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய மயில் ஓவியம் கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு.. தமிழகத்திலேயே பெரியது!5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய மயில் ஓவியம் கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு.. தமிழகத்திலேயே பெரியது!

அவதி

அவதி

அப்போது ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாமல் மகள் யாஷினி மிகுந்த அவதி அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் செல்போன் கேட்டு வகுப்பை கவனித்து வந்தார். இதை பார்த்த தந்தைக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதையடுத்து தான் சிறையில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றார்.

நாகேஷ்யா

நாகேஷ்யா

அங்கு அவருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார். யாமினி தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து நாகேஷ்யா கூறுகையில், நான் வீட்டுக்கு சென்ற போது தனக்கு ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க போன் இல்லை என என் மகள் என்னிடம் தெரிவித்தார். அவர் மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர்.

கல்வி

கல்வி

அவர் மருத்துவராக விரும்புகிறார். கல்வியின் முக்கியத்துவத்தை நான் சிறையில் உணர்ந்தேன். என் மகளின் கனவை நிறைவேற்ற இதுவரை நான் எதையும் செய்ததில்லை. அதனால் செல்போன் வாங்க முடிவு செய்து எனது மகளுக்கு அதை வாங்கிக் கொடுத்தேன். எனக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.

நீர் பாய்ச்சுதல்

நீர் பாய்ச்சுதல்

எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதை வைத்து விவசாயம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வேன் என்றார். சிறையில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், கார்பெண்டர் பணிகள் உள்ளிட்டவற்றை அவர் செய்தார். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு ரூ 60 அல்லது ரூ 75 வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
40 years old man who released for good conduct bought cellphone for his daughter who is attending online class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X