For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிணமூல் காங்கிரசை சேர்ந்த 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர ரெடி.. பாஜக மாநில நிர்வாகி அதிரடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவை ஆதரித்து வரும் திரிணமூல் காங்கிரசை சேர்ந்த. 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தயாராக இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக முதல்முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதற்கு பதிலடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் முற்றி வருகிறது.

41 MLAs in West Bengal ready to join BJP: says BJP general secretary Kailash Vijaywargiya

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து வரும் பாஜக, புதிதாக 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர தயாராக இருப்பதாக கூறி அதிரவைத்துள்ளது.

மேற்குவங்க மாநில பாஜகு பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா இதுபற்றி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அதனை வெளியிட்டால் மம்தா பானார்ஜி அரசு கவிழ்ந்துவிடும். ஆனால் யார் யாரை கட்சியில் சேர்ப்பது என ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.

English summary
BJP general secretary Kailash Vijaywargiya on Thursday claimed that he has a list of 41 MLAs "who support" the Mamata Banerjee government in West Bengal but are ready to join the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X