For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து- 43 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பன்ஞார் என்ற இடத்தில் இருந்து கடகுஷானிக்கு தனியார் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தின் மேற்கூரையிலும் பலர் அமர்ந்து பயணம் செய்தனர். தோல்மேர் என்ற

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் குலு மலைப்பகுதியில் 500 அடி பள்ளத்தில் கூட்ட நெரிசலால் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 43 பேர் பலியாகி உள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பன்ஞார் என்ற இடத்தில் இருந்து கடகுஷானிக்கு தனியார் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தின் மேற்கூரையிலும் பலர் அமர்ந்து பயணம் செய்தனர்.

43 die in Himachal Kullu bus accident

தோல்மேர் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

உடனடியாக தீயணைப்பு, மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே 25 பேர் பலியாகினர். மீட்கப்பட்டோரில் மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

43 die in Himachal Kullu bus accident

தற்போதைய நிலையில் 35 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்துக்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
43 people were killed when a private bus plunged into a 500 foot gorge in Kullu district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X