For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாயுடு மீது அதிருப்தி.. ஆந்திரத்தின் அடுத்த முதல்வர் யார்?... சர்வே முடிவில் பரபர தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாயுடு மீது அதிருப்தி...சர்வே முடிவில் பரபர தகவல்கள்- வீடியோ

    டெல்லி: ஆந்திரத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு சர்வே முடிவுகளில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது.

    ஆந்திரத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியன கருத்து கணிப்பை எடுத்துள்ளது.

    சுமார் 10 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் ஆந்திரத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வர வேண்டும் என 43 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    5 சதவீதம்

    5 சதவீதம்

    அதுபோல் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வெறும் 38 சதவீதம் பேரே ஆதரவு தந்துள்ளனர். ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு 5 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    ஆதரவு

    ஆதரவு

    ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். இதனால் அவருக்கு ஆதரவு பெருகி இருக்கலாம் என தெரிகிறது.

    பொறுப்பு முதல்வர்

    பொறுப்பு முதல்வர்

    இதுபோல் தெலுங்கானாவிலும் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. எனினும் அடுத்த ஆண்டு ஆட்சி முடிவடையவுள்ள நிலையில் முன்னதாகவே கேசிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது பொறுப்பு முதல்வராக பதவியில் இருந்து வருகிறார் சந்திர சேகர ராவ்.

    தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி

    தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி

    இந்நிலையில் அவரே மீண்டும் முதல்வராக வேண்டும் என 43 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர் கிஷன்ரெட்டிக்கு 15 சதவீதம் பேரும், தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய பேராசிரியர் கோதண்ட ராமுவுக்கு 6 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

    English summary
    43 Percent people want Jagan Mohan Reddy as next Andhra CM. A survey taken by english news agency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X