For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீஹார் துணை முதல்வரே.... ஐ லவ் யூ... மேரி யூ...: 44000 பெண்கள் கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாட்னா: பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக 44 ஆயிரம் பெண்கள், வாட்ஸ் அப் எண்ணில் அப்ளிகேசன் அனுப்பியுள்ளனர். சில பெண்கள் நேரடியாக போன் செய்தே தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகான அரசியல்வாதிகள் நம் நாட்டில் பலர் இருக்கின்றனர். அவர்களை திருமணம் செய்ய பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் துணைதலைவர் ராகுல்காந்திக்கு ஏராளமான பெண்கள் அப்ளிகேசன் போட்டும் இன்னும் அவர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

44000 marriage proposals to Tejashwi Yadav on WhatsApp number

இந்த நிலையில் முன்னாள் முதல்வர், மத்திய அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மகன் தோஜஸ்வி, 26 தற்போது பீஹார் மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்தியாவின் இளம் துணை முதல்வர் இவராகத்தான் இருப்பார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

சாலை வசதி தொடர்பான புகார்களை தெரிவிக்க அமைச்சர் வாட்ஸ் அப் எண் அறிவித்திருந்தார். அதில், 47 ஆயிரம் புகார்கள் வந்தன. அதில் 3 ஆயிரம் செய்திகள் சாலை வசதி பற்றியது. மற்றவை யாதவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து வந்தவையாம்.

பெரும்பாலான பெண்கள் தங்களது விபரம், படிப்பு, நிறம் மற்றும் உயரம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த எண்ணை, தேஜஸ்வியின் தனிப்பட்ட எண் என அப்பெண்கள் எண்ணியுள்ளனர். எனவேதான் தங்களில் விருப்பத்தை அனுப்பியுள்ளனர். இதை அதிகாரிகளும் படித்து விட்டனர்.

இந்த செய்தியை படித்த தேஜஸ்வி, நான் திருமணமானவனாக இருந்திருந்தால் எனக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கும் நல்லவேளை எனக்கு திருமணம் இன்னும் நடக்கவில்லை என்று அதிகாரிகளிடம் நகைச்சுவையாக கூறினாராம். எனக்கு பெற்றோர் பார்த்து நிச்சயப்பட்ட திருமணத்தில் தான் விருப்பம் என்கிறார் இந்த 26 வயதேயான துணை முதல்வர்.

அரசியல்வாதிகளிடம் திருமணத்திற்கு உதவி கேட்டுதான் அப்ளிகேசன் வரும். அழகான அரசியல்வாதி என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பீகார் பெண்கள் அப்ளிகேசன் போடுகிறார்களே .

English summary
Deputy chief minister Tejashwi Yadav (26), also the road construction department minister, had issued a Whatsapp number in June urging people to send their complaints regarding roads. Four months later, the department has received 47,000 messages, 44,000 of them from young girls heaping praise on Tejashwi and wishing to marry him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X