For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் அந்தோ பரிதாபம்... டெபாசிட்டை பறிகொடுத்த 45% பாஜக வேட்பாளர்கள்!

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நிறுத்திய வேட்பாளர்களில் 45% டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறார்கள்/

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    உ.பி. உள்ளாட்சி தேர்தலில் அந்தோ பரிதாபம்...டெபாசிட்டை பறிகொடுத்த 45% பாஜக வேட்பாளர்கள்!- வீடியோ

    லக்னோ: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 45% பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்து பரிதாபமான தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்தே பாஜக ஆட்சியை கைப்பற்றியது என்பது நீண்டகால புகார்.

    இந்த சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில்தான் உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதாக மார்தட்டுகிறது பாஜக. ஆனால் புள்ளி விவரங்களொ அப்படியெல்லாம் இமாலய வெற்றியை பாஜக பெறவே இல்லை என்பதையே வெளிபப்டுத்துகிறது.

    45% டெபாசிட் காலி

    45% டெபாசிட் காலி

    உ.பியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட மேயர் தேர்தல்களில் 14 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்ட இதர உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் பாஜக மிக மோசமான தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இப்போது உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் 45% வேட்பாளர்கள் டெபாசிட்டை கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

    வேட்பாளர்கள் எண்ணிக்கை

    வேட்பாளர்கள் எண்ணிக்கை

    உ.பி.யில் 12,644 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலில் 8,038 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது. இவர்களில் 3,656 பேர் டெபாசிட்டை கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள். மொத்தமாக உ.பி. உள்ளாட்சியில் வென்ற பாஜக வேட்பாளர்கள் எண்ணிக்கை 2,366தான்.

    வென்றது 664

    வென்றது 664

    நகர பஞ்சாயத்துகளில் 664 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதைவிட இருமடங்குக்கு அதிகமாக 1,462 பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துவிட்டனர்.

    டெபாசிட் இழப்பு

    டெபாசிட் இழப்பு

    சமாஜ்வாடி கட்சி 1,260 உள்ளாட்சி இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர்களில் 2922 டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.

    டெபாசிட் இழந்தது எத்தனை?

    டெபாசிட் இழந்தது எத்தனை?

    பகுஜன் சமாஜ் கட்சியானது 703 உள்ளாட்சி இடங்களில் வென்றுள்ளது. 2,910 பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கின்றனர்.

    டெபாசிட் பறிபோனது எத்தனை?

    டெபாசிட் பறிபோனது எத்தனை?

    காங்கிரஸ் கட்சி 420 உள்ளாட்சி இடங்களில்தான் வென்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்களில் 2,770 பேர் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். இந்த மூன்று கட்சிகளை ஒப்பிடுகையில் பாஜக வேட்பாளர்கள்தான் அதிக அளவு டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.

    English summary
    In UP civic elections BJP's 3,656 candidates lost their deposit: It was higher than the number of seats it won 2,366.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X