For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஎஸ்எல்வி சி34... ஒரே அடியில் 20 "சாட்டிலைட்ஸ்".. அடுத்த சாதனைக்கான கவுண்ட் டவுன்.. ஸ்டார்ட்ஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோளைகளை ஏந்திச் செல்ல இருக்கும் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 34 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 48 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை ஏந்தி, விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ சாதனை புரிந்திருந்தது. இந்நிலையில் தற்போது தனது சாதனையை தானே முறியடிக்கும் வகையில், 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டை விண்ணில் ஏவ இருக்கிறது.

48-hour countdown starts for launching of PSLV-C34

வரும் 22ம் தேதி காலை 9.25 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டைச் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் 19 செயற்கைக்கோள்கள் 560 கிலோ எடை கொண்டவை. இந்த 20 செயற்கைக்கோள்களையும் விண்ணுக்கு கொண்டு செல்லும் பிஎஸ்எல்வி-சி34 ராக்கெட்டின் எடை 1,288 கிலோ ஆகும்.

இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியில் இருந்து 505 கி.மீட்டர் தொலைவில் சூரியனுடன் ஒத்தியங்கும் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதன் மூலம் புதிய சாதனை படைக்க இந்தியா தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிஎஸ்எல்வி சி34 டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

English summary
The ISRO scientists have started the 48 hour countdown for the launching of PSLV-C34 rocket, which carries 20 satelites at a time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X