For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம்… குலுங்கிய டார்ஜிலிங்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

5.0 magnitude earthquake hits Sikkim, tremors felt in Darjeeling
டெல்லி: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். ரிக்டெர் அளவுகோளில் 5.0 அளவாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

காலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. நிலநடுக்க பாதிப்பு டார்ஜிலிங் பகுதியிலும் எதிரொலித்தது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு 50 பேர் பலியாகினர். சிக்கிம்மில் 7 பேரும், பீகாரில் 2 பேரும், டார்ஜலிங்கில் 3 பேரும், சிலிகுரியில் ஒருவரும் உயிரிழந்தனர். நேபாளத்தில், நில நடுக்கத்திற்கு ஐந்து பேர் பலியானார்கள். கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. சிலிகுரி கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. அந்த நிலநடுக்கம் சிக்கிம் மாநிலத்தில் 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் என்று வர்ணிக்கப்பட்டது.

English summary
A 5.0 magnitude earthquake rattled Sikkim on Thursday. Tremors were felt in Darjeeling also. Following the quake, all schools and colleges were closed in Sikkim. No casualties have been reported till now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X