For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்தார்பூர் புனித யாத்திரை... தினமும் 5000 பேருக்கு அனுமதி.. பாகிஸ்தான் ஒப்புதல்

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: கர்தார்பூர் புனித யாத்திரை தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று வாகா எல்லையில் நடந்தது. அப்போது இந்த ஆண்டு முழுவதும் தினமும் 5 ஆயிரம் பேரை கட்டுபாடு இன்றி யாத்திரைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்தது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் பாகிஸ்தானின் கர்தார்பூரில் வாழ்ந்தார். அவர் நினைவான அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு சீக்கியர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபடுவதை தங்கள் வாழ்நாள் கடைமையாக வைத்துள்ளார்கள்.

5,000 pilgrims will be allowed to visit Kartarpur Sahib Gurudwara per day, India Tells Pakistan

இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இன்றி இந்த குருத்வாராவுக்கு சென்று வர கர்தார்பூர் வழித்தட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருறிது, இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது.

இளைஞர்கள் சுயதொழில் ஆரம்பிங்க.. அரசு வேலைக்காக காத்திருக்கலாமா... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுஇளைஞர்கள் சுயதொழில் ஆரம்பிங்க.. அரசு வேலைக்காக காத்திருக்கலாமா... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

கடந்த ஏப்ரலில் சுஸ்மா ஸ்வராஜ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்றேமும் ஏற்படாததால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அட்டாரி வாகா எல்லையில், பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யாத்ரீகர்களின் பயணம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

அப்போது இந்தியா தரப்பில், யாத்ரீகர்கள் எல்லைய கடந்து செல்லும் தாழ்வாரத்தை பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்தாத வண்ணம் சோதனை நடத்த வேண்டும் என பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வெளியுறவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள், அல்லது குழுக்கள் யாத்திரைக்கு இடையூறு விளைவிப்பதோ மற்றும் யாத்ரீகர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு அனுமதிக்ககூடாது என பாகிஸ்தானிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிரான தேச விரோத செயல்களை அனுமதிக்க கூடாது என்றும் என்றும அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் எந்த வித தடையும் இன்றி, எளிதில் சீக்கியர்கள் புனித யாத்திரை செல்ல பாகிஸ்தான அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது. தினமும் 5 ஆயிரம் இந்திய யாத்ரீகர்களை எந்த விதமான விசாக்களும் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

English summary
Throughout the year, 5,000 pilgrims will be allowed to visit Kartarpur Sahib Gurudwara per day, India Tells Pakistan in Round 2 of Kartarpur Corridor Talks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X