For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்துக்களை விட விவாகரத்தான முஸ்லிம் பெண்கள்தான் இந்தியாவில் அதிகம்..!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இந்துக்களை விட முஸ்லிம் பெண்களே அதிக அளவில் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றனர் என்று 2011ம் ஆண்டில் சென்சஸ் விவரம் தெரிவிக்கிறது.

2011-ம் ஆண்டு சென்சஸ் விவரங்களின் படி....

  • விவாகரத்து மற்றும் பிரிந்து வாழ்தல் கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினரிடையே அதிகமாக உள்ளது.
  • விவகாரத்து குறைவாக இருப்பது ஜெயின்களிடம்தான்...
5 in 1,000 Muslim women divorced
  • கணவரை பிரிந்து வாழும் இந்து பெண்களின் சதவீதம் அதிகமாக இருந்தாலும் விவாகரத்தில் முஸ்லிம் பெண்களே இந்துக்களை விட அதிகமாக உள்ளனர்.
  • கணவரை இழந்த பெண்கள் கிறிஸ்தவர்களுக்கு அடுத்து புத்த மதத்தில் அதிக அளவில் உள்ளனர்.
  • முஸ்லிம்களை விட இந்து மற்றும் சீக்கிய பிரிவில் அதிக அளவில் விதவைகள் உள்ளனர்.
  • இந்துக்களில் 1000 திருமணத்திற்கு 5.5 சதவீதம் பெண்கள் கணவர் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர்.
  • இதில் கணவரால் கைவிடப்பட்ட பெண்களும் கணவரை இழந்த பெண்களும் அடங்குவர்.
  • இவர்களில் விவாகரத்து ஆன பெண்கள் மட்டும் 1000 திருமணத்திற்கு 1.8 சதவீதம்.
  • இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர் என 3 பிரிவினரையும் சேர்ந்து ஆயிரத்திற்கு 2-3 சதவீதம் விவாகரத்து இருக்கும் போது முஸ்லிம்களில் அது 5 சதவீதமாக உள்ளது.
  • கிறிஸ்தவர்கள் மற்றும் புத்த மதத்தினரிடயே விவாகரத்து ஒரே மாதிரியாக இருப்பதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • திருமண வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாதவர்களில் இந்துக்கள் குறைவு.
  • இதன்படி இந்து ஆண்கள் 16 சதவீதமும், பெண்கள் 10 சதவீமும் உள்ளனர். ஆனால் மிக அதிக அளவாக இளம் வயது திருமணங்கள் நடக்கின்றன.
  • கிறிஸ்தவர்களில் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் ஆண்களில் 21 சதவீதமும், பெண்களில் 18 சதவீமும் உள்ளனர்.

இவ்வாறு 2011 சென்சஸ் விவரங்கள் கூறுகின்றன.

English summary
Freshly released Cencus 2011 data shows Muslim women have a higher divorce rate than Hindu women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X