For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாசிக் கும்பமேளா: 5.40 லட்சம் காண்டம் சப்ளை… சாதுக்கள் கொதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாசிக்: கும்பமேளா திருவிழாவை ஒட்டி, நாசிக் நகரத்திற்கு 5.40 லட்சம் காண்டம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கும்பமேளா அமைப்பாளர்களும், சாமியார்களும் கண்டித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற கும்பமேளா மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் வரும் 14 ம் தேதி தொடங்குகிறது. இரண்டரை மாதகாலம் நடைபெறும் இந்த விழாவில் பல லட்சம் சாதுக்களும், பக்தர்கள் கோதாவரி நதியில் புனித நீராடுவர்.

5.40 lakhs condom supply annoys Kumbh Mela planners

இதனிடையே மகாராஷ்டிர எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு வழக்கத்துக்கு மாறாக 5.40 லட்சம் காண்டம்களை வரவழைத்துள்ளது. கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவு அளவில் காண்டம்கள் வரவழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது.

இந்துக்கள் விழா நடக்கும் நிலையில், இப்படி அதிக அளவில் காண்டம்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும்' என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்த மாதங்களில் சப்ளை செய்யப்படும் 2.50 லட்சம் காண்டம்கள் தான் நாசிக் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 5.40 லட்சம் காண்டம்கள் என்று கூறுவது தவறான தகவல். கும்பமேளாவை ஒட்டி நாங்கள் இந்த ஏற்பாட்டை செய்யவில்லை' என்று விளக்கம் அளித்துள்ளது.

எனினும் கும்பமேளா விழா மூலம் சுகாதார பாதிப்பு யாருக்கும் வரக்கூடாது என்ற காரணத்தால் தான் இப்படி அதிக அளவில் காண்டம்கள் வரழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Certain sections of the media had reported that authorities would be despatching 5.40 lakh condoms to Nashik to meet the surging demands during the Kumbh Mela.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X