For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் 3 சாதனைகள், 5 சவால்கள்: அருண் ஜேட்லி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் மோடி அரசின் 3 சாதனைகளையும் 5 சவால்களையும் பொது பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்டியலிட்டார்.

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

5 Challenges Listed by Finance Minister Arun Jaitley in His Budget Speech

அருண் ஜேட்லி தமது பட்ஜெட் உரையில் மத்திய அரசின் 3 சாதனைகளைப் பட்டியலிட்டார்.

1. ஜன் தன் (வங்கிக் கணக்கு) திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

2. நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏலம் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

3. 'தூய்மை இந்தியா' திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-15-ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்

அதேபோல் 5 சவால்களையும் அருண் ஜேட்லி பட்டியலிட்டார். அவை விவரம்:

1. விவசாயத் துறை வருமானத்தை பெருக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

2. கட்டுமானத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

3. உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது.

4. நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும்.

5. நிதி முதலீட்டை ஈர்க்க கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அருண்ஜேட்லி கூறினார்.

English summary
Finance Minister Arun Jaitley announced a budget for growth on Saturday, saying the economy was ready to "fly", that the government would boost investment and ordinary people should benefit. Here are the 5 challenges listed by him to the economy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X