For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் பேய் மழை... கடலில் மூழ்கிய நெல்லையைச் சேர்ந்த ஐவர்...!

Google Oneindia Tamil News

நித்திரவிளை: கேரளாவில் பேய் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்ற நெல்லையை சேர்ந்த 5 பேரை பெரிய அலை இழு்த்து சென்றது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

5 from Nellai drowned in Kerala sea

நெலலை மேலப்பாளையத்தில் இருந்து இரண்டு சொகுசு காரில் 20 பே்ர் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். மாலை தமிழக எல்லையோர கேரள பகுதியான பூவார் ஆற்று பாலத்தில் இருந்து கடற்கரைககு சவாரி சென்றனர். ஆறும், அரபிக்கடலும் சங்கமிக்கும் பொழிமுக பகுதியில் இறங்கி கடலின் அழகை ரசித்து கொண்டிருந்தனர்.

5 from Nellai drowned in Kerala sea

அப்போது எதிர்பாராத விதமாக பெரிய அலை ஓன்று எழுந்தது. அந்த அலை ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளை இழுத்து சென்றது. இதை பார்த்த மறறவர்கள் அபாய குரல் எழுப்பினர். உடனடியாக அபபகுதியை சேர்நத மீனவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

5 from Nellai drowned in Kerala sea

இதுகுறித்து பூவார் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அலையில் இழுத்து செல்லப்பட்டவர்களை மீனவர்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

5 from Nellai drowned in Kerala sea

விசாரணையில் கடலில் மூழ்கியது மேலப்பாளையத்தை சேர்நத காஜா மனைவி தொய்பா, இவரது மகள் தபூரா, மற்றும் உறவினர்கள மரகபா, பாத்திமா, மீரா பிளளை தெருவை சேர்ந்த சொகைல் என தெரிய வந்தது.

5 from Nellai drowned in Kerala sea

பூவார் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காற்றும் வேகமாக வீசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரிய அலைகள் எழுந்து வந்துள்ளது. இரவு நேரமாகி விட்டதால் மீட்பு பணி தற்காலிகமாக ஓததி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும் மீட்பு பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது உறவினர்கள் பதற்றத்தில் உளளனர்.

கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் கோடை மழை வெளுக்கிறது

இந்த நிலையில், வளி மண்டல மேலடுககு சுழற்சி காரணமாக நெலலை மாவட்டத்தில் கோடை மழை பெயது வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளு குளு நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். இந்த மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும். கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரமும் மே மாதம் தொடங்கியது.

இந்த நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவடடத்தின் பல பகுதிகளிலும் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லையை பொறுத்தவரை நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம், பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செஙகோட்டை. சிவகிரி பகுதியில் பரவலான மழை பெய்தது. தொடர் மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளுகுளு நிலை காணப்படுகிறது.

இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 69.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 120 கன அடி தண்ணீர் வருகிறது. மணி்முத்தாறு அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிககு 11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அம்பை 4, பாளையங்கோட்டை 3, ராதாபுரம் 3, செங்கோட்டை 7, சிவகிரி 11, தென்காசி 10, நெலலை 1.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

English summary
5 persons from Nellai were drowned in Kerala when they visited a seashore near Nithiravilai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X