For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு தில்லுமுல்லு...வினா தாள் லீக் செய்ய முயன்ற 5 பேர் பீகாரில் கைது!

நாடு முழுவதும் நேற்று நடந்த நீட் தேர்வின் வினா தாளை லீக் செய்ய முயன்றதாக பீகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

பாட்னா: நீட் தேர்வு வினா தாட்களை அவுட் செய்ய முயன்ற புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே வினா தாள் அவுட் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டு பின்னர் அமைதியாக தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் வினா தாள் அவுட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதன் பேரில் அந்தக் கல்லூரி மாணவர் சுபம் மண்டல், உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இதே போன்று நாளந்தா பல்கலை கழகத்திலும் வினா தாள் லீக் செய்த புகாரில் மாணவர் சிவகுமார் மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

5 held for trying to leak NEET question papers in Bihar

இந்த அவுட் செய்த பின்ணணியில் டிரைவர் ஒருவரும் இருந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து ஓட்டுநர் சஞ்சய் யாதவை போலீஸார் கைது செய்தனர்.இவர் வினாத்தாள் கட்டுகளை ஏற்றிச் சென்ற வேனின் டிரைவராக இருந்தவர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்," டிரைவர் சஞ்சய் யாதவ்,வினா தாள் கட்டுக்களை ஏற்றிச் சென்றபோது,அதன் சீலை உடைத்து வினா தாளை உருவி,வெளியே மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.இவரிடம் இருந்துதான் வினா தாள் வாங்கி மற்ற 4 பேரும் நாளந்தா பல்கலை மற்றும் பாட்னா மருத்துவக் கல்லூரியில் தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு விநோயோகம் செய்துள்ளனர்.

பிடிபட்டவர்களிடமிருந்து நீட் தேர்வு வினா தாள் கட்டுகள், வேனின் சீலை உடைக்க பயன்பட்ட உபகரணங்கள்,செல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. மேலும் இந்த முறைகேட்டின் பின்ணணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

English summary
Five persons, including a law and two medical students besides a deputy centre superintendent, were arrested while allegedly trying to leak the National Eligibility Cum Entrance Test (NEET-2017) question papers in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X