For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் டூட்டியில் இருக்காரு.. சீக்கிரம் வந்துடுவாரு.. புல்வாமாவில் தந்தை இறந்தது அறியாத குழந்தை

Google Oneindia Tamil News

Recommended Video

    புல்வாமாவில் தந்தை இறந்தது அறியாமல் காத்திருக்கும் குழந்தை- வீடியோ

    சண்டீகர்: அப்பா ஜம்முவில் டூட்டியில் இருக்கிறார். சீக்கிரமாக இங்கு வந்து என்னை புது பள்ளியில் சேர்த்து விடுவார் என்ற புல்வாமாவில் வீரமரணமடைந்தவரின் 5 வயது சிறுவன் கூறுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    பஞ்சாப்

    பஞ்சாப்

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர். இதில் சிஆர்பிஎப் பிரிவின் தலைமை காவலர் ஜெய்மால் சிங்கும் (44) ஒருவர். அவர் பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்தவர். புல்வாமா துயரச் சம்பவம் நடந்த போது அவர் ஒரு வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தார். தனது 5 வயது மகன் குர்பர்காஷை நல்ல பள்ளியில் சேர்க்க குடும்பத்தினரை சண்டீகருக்கு அண்மையில் குடியேற்றினார்.

    குர்பர்காஷ்

    குர்பர்காஷ்

    இந்நிலையில் ஜெய்மால் சிங் இறந்தது குறித்து அவரது தாயும் பாட்டியும் அழுது கொண்டிருந்தனர். அவரது கலோட்டி குர்த் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. எனினும் தந்தை இறந்தது அவரது மகன் குர்பர்காஷுக்கு தெரியவில்லை.

    பணம் சம்பாதிக்க

    பணம் சம்பாதிக்க

    தனது தந்தை ஜம்மு காஷ்மீரில் டூட்டியில் உள்ளார். அவர் விரைவில் இங்கு வந்து புதிய பள்ளியில் தம்மை சேர்த்து விடுவார். எங்களுக்காக அப்பா பணம் சம்பாதிக்க சென்றுள்ளார் என்ற நம்பிக்கையோடு அச்சிறுவன் அங்கும் இங்கும் ஓடியாடுகிறான்.

    18 ஆண்டுகள்

    18 ஆண்டுகள்

    வெறும் 10-ஆம் வகுப்பு முடித்த கையோடு நாட்டுக்கு சேவையாற்ற வந்த ஜெய்மால் சிங்கிற்கு தனது மகனுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய லட்சியமாக இருந்தது. இதுகுறித்து ஜெய்மால் சிங்கின் மனைவி சுக்ஜித் கௌர் (42) கூறுகையில் 18 ஆண்டுகள் கழித்துதான் எங்களுக்கு மகன் பிறந்தான்.

    கண்ணீர் பேட்டி

    கண்ணீர் பேட்டி

    இந்த உலகத்திலேயே எனது கணவர் பெரிதும் விரும்பியது குர்பர்காஷைதான். இனி தந்தையில்லாமல் அவன் எப்படி வாழப் போகிறான் என்பது குறித்து எனது தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.

    English summary
    Gurparkash, 5 years old boy, son of martyr in Pulwama attack says that his father is in duty. he will come soon to admit me in new school.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X