For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி 55 வயது நபர் மரணம்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவை ஆட்டிப்படைக்கும் நிஃபா வைரஸ்..வீடியோ

    கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது நபர் உயிர் இழந்தார்.

    கேரளாவில் உள்ள மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. நிபா வைரஸ் தாக்கி 2 நர்ஸுகள் உள்பட 13 பேர் பலியாகினர்.

    55-year-old man dies of Nipah virus in Kerala

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நெல்லிக்கோடை சேர்ந்த மதுசூதனன்(55) என்பவர் நேற்று இரவு பலியானார். நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இதையடுத்து கேரளாவில் நிபா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொல்கத்தாவில் காய்ச்சலால் உயிர் இழந்துள்ளார்.

    ஒரு மாத காலம் விடுப்பில் கேரளாவுக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர் கடந்த 20ம் தேதி காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நிபா வைரஸ் தாக்கி இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    அவரது ரத்த மாதிரி உள்ளிட்டவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    A 55-year-old man named Madhusudhanan died of Nipah virus in Kerala's Kozhikode district. The Nipah death toll has increased to 14.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X