For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

16வது லோக்சபாவில் 58% பேர் புதிய எம்.பிக்கள்...

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள எம்.பிக்களில் 58 சதவீதம் பேர் புதியவர்கள். அதாவது இப்போது தான் அவர்கள் முதன் முறையாக நாடாளுமன்றத்திற்குள் அடி எடுத்து வைக்க இருக்கிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளில் மிக அதிக பட்ச அளவாகும்.

16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்தது. கடந்த வெள்ளியன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. எனவே, மத்தியில் புதிய அரசை அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

ஏற்கனவே, அறிவிக்கப் பட்டபடி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், லோக்சபாவில் இம்முறை அதிக புதியவர்கள் இடம்பெற உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்த பி.ஆர்.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது :-

முதல் முறையாக....

முதல் முறையாக....

தேர்ந்தெடுக்கப்பட்ட543 எம்.பி.,க்களில் சுமார் 315 உறுப்பினர்கள் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.

முன் அனுபவம்...

முன் அனுபவம்...

இது மட்டுமல்லாமல் 226 உறுப்பினர்கள் அதாவது 42 சதவீதம் பேர் ஏற்கனவே லோக்சபாவில் முன் அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர்.

9வது முறை....

9வது முறை....

பீகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ராம் விலாஸ் பஸ்வான், ம.பி,,யிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கமல்நாத், மேகாலயாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பி.ஏ.சங்மா ஆகியோர் ஒன்பதாவது முறையாக லோக்சபாவிற்கு செல்கின்றனர்.

பெண் உறுப்பினர்களில்...

பெண் உறுப்பினர்களில்...

16-வது லோக்சபாவை பொறுத்த வரையில் பெண் உறுப்பினரான சுமித்ரா மகாஜன் அதிக அனுபவங்களை பெற்றவராக திகழ்கிறார்.

8வதுமுறை...

8வதுமுறை...

கரிய முண்டா, மற்றும் சிபுசோரன், அர்ஜூ்ன் சரண் ஆகியோர் எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பாஜக நிலவரம்....

பாஜக நிலவரம்....

மேலும் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.,உறுப்பினர்கள் 282 பேரில் 116 உறுப்பினர்கள் (41 சதவீதம்) ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர் மீதம் உள்ள 165 பேர்(59 சதவீதம் ) முதல் முறையாக அனுபவத்தை பெற உள்ளனர்.

மற்ற கட்சிகளின் விபரம்...

மற்ற கட்சிகளின் விபரம்...

அதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்ற 44 பேரில் 35 பேரும்,அ.தி.மு.க.,வில் 34 பேர்(90 சதவீதம்) திரிணமுல் காங்கிரஸ் 19 (56 சதவீதம்) பேர் , பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த 12 பேர் (60சதவீதம்) ஆகியோர் முதன் முறையாக பார்லிமென்டிற்கு நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fifty-eight percent of members elected to the Lok Sabha in this general election are first-timers, the highest in the last three decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X