For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிசாவில் கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் 5டி திட்டம்.. மக்கள் பெரும் வரவேற்பு!

By Manoj Mishra
Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு மூலம் கல்வித்துறையில் செய்யப்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இது கல்வித்திட்டத்தையும், ஆசிரியர் பயிற்சிகளையும் மாற்றி, பள்ளி கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வரும் திட்டங்கள் மட்டும் இங்கு செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மாணவரிடமும் மாற்றம் கொண்டு வரும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரிடமும் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை வெளியே கொண்டு வந்து, அவர்கள் தங்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஒடிசாவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அம்மாநிலத்தில் கல்வியில் புதிய புரட்சியை கொண்டு வர வேண்டும் என்றுதான் அந்த மாநில அரசு 5டி திட்டம் என்ற புதிய திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. Technology, Teamwork, Transparency, Time and Transformation என்ற 5T திட்டத்தை அம்மாநில அரசு பின்பற்றி வருகிறது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு அடிப்படையான சில காரணங்கள் உள்ளன. அரசு மேல்நிலை பள்ளிகளிலும், உயர்நிலை பள்ளிகளிலும் புதிய தொழில்நுட்பத்தை இதன் மூலம் புகுத்த வேண்டும். டிஜிட்டல் வகுப்பறைகள், விவாதிக்க உதவும் வகுப்பறைகள், இ நூலகம், நவீன அறிவியல் சோதனை கூடங்கள் என்று பல புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி மிக முக்கியமாக முன்னாள் பள்ளி மாணவர்கள், கம்யூனிட்டி உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல் தலைவர்கள் என்று பலரின் உதவிகளை வைத்து பள்ளிகளில் தரத்தை உயர்த்தும் வகையில் நிறைய பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த 5டி திட்டத்தின் கீழ் ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் கொண்டு வரப்பட உள்ளது. ஒரே கட்டமாக இல்லாமல் பல்வேறு கட்டங்களாக இந்த பள்ளிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1,075 உயர் நிலை பள்ளிகள் ஒடிசாவில் அடையாளம் காணப்பட்டு உள்ளது. திட்டத்தின் மூலம் இந்த பள்ளிகள் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. மிக குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் காரணமாக பள்ளிகளில் உடனடியாக கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி மாணவிகளின் தனிப்பட்ட தன்னம்பிக்கை, திறன் அதிகரித்தது. கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக்கொள்ள உதவியாக இது அமைந்துள்ளது. அதேபோல் கல்வித்துறையிலும், அதன் கட்டமைப்பிலும் 5டி மாடல் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது கொரோனா காலம் என்பதால் சுகாதாரத்துறை மீது அதிக கவனமும் செலுத்தப்பட்டாலும் கல்வித்துறையிலும் குறிப்பிட்ட பங்களிப்பு இந்த திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

5T School Transformation: Shaping the Future Generations

இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக 45 லட்சம் ரூபாய் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் கொடுத்த 15 லட்சம் ரூபாய் தொண்டு நிதி அடக்கம். அதிலும் திட்டம் தொடங்கி வேகமாக பணிகள் நடந்த நிலையில் கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்றது. ஆனால் முதல் கட்ட பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இதில் தொடர்ந்து மேற்கொண்டு பணிகள் நடக்கும். மேலும் 3 வருடங்களுக்காகவாது இந்த திட்டத்தின் கீழ் பாடத்திட்ட ரீதியான மாற்றங்கள் பள்ளிகளில் செய்யப்படும். எதிர்காலத்திற்கு ஏற்றபடி பள்ளி, கல்லூரிகளை மாற்றும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைப்பது மட்டுமின்றி அவர்கள் இந்த கல்வியை நல்ல வளாகத்தில் பெறுவதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது. அதிலும் மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் STEM அடிப்படையிலான அறிவியல் ஆய்வகங்கள் மூலம், மாணவர்கள் பெரிய குறிக்கோளைகளை கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முடியும். அவர்கள் தங்கள் பாடங்களில் இன்னும் எளிதாக கவனம் செலுத்த முடியும். தனியார் பள்ளிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களையும் இந்த திட்டம் மாற்றும். அதேபோல் இந்த திட்டம் மூலம் பள்ளிகளும் ஒரே டொமைன் கீழே வரும். இதனால் வருகை பதிவேடு, ரிப்போர்ட் கார்ட், டிசி என்று அனைத்து விவரங்களையும் எளிதாக இணையம் மூலமே பெற முடியும்.

முதல் கட்டமாக இந்த திட்டத்தில் 4,198 மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும், 381,280 மேல்நிலை பள்ளி மாணவர்களும் ஈடுப்படுத்தப்படுவார்கள். இதில் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பம், வசதிகளை அறிமுகப்படுத்தி மாணவர்களின் திறமைகளை 80 சதவிகிதம் வரை உயர்த்த இந்த உதவியாக இருக்கும். உள்ளூர் அளவில் மட்டுமின்றி சர்வதேச மேடைகளில் அவர்கள் ஜொலிக்கும் வகையில் அவர்களை தயார் செய்து, உலக நாட்டு மாணவர்களுக்கு இணையாக உருவாக்குவதே திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டம் மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட்போர்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். முக்கியமான 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தனித்துவமான கற்பித்தல்-கற்றல் அனுபவங்களைப் பெற தொடங்கி உள்ளனர்.

இந்த திட்டம் மூலம் கல்வி ரீதியாக, கட்டமைப்பே ரீதியாக பள்ளிகள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும். விளையாட்டு, அறிவியல் மற்றும் கலாச்சாரத் துறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் அதற்கான மைதானங்கள், சோதனை மையங்கள் ஆகியவையும் அமைக்கப்படும்.

ஒடிசா முதல்வரின் தனி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன்தான் இந்த 5T திட்டத்திற்கும் செயலாளராக பணியாற்றி வருகிறார். 5T திட்டத்தை இவர் மேற்பார்வையிடுவதன் மூலம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு பள்ளிகள் பயன் அடைய தொடங்கி உள்ளன. அவர் மாநிலத்தில் பல்வேறு கல்வி அமைப்புகள், நிர்வாகிகள், கமிட்டிகள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் பேசி வருகிறார். இதன் மூலம் மறுமலர்ச்சி திட்டங்கள் அனைவரின் பங்களிப்போடு நடப்பதை அவர் உறுதி செய்துள்ளார். முதல்வரின் வழிகாட்டுதலால் வளர்ச்சி திட்டங்கள் ஒடிசாவில் அனைத்து துறைகளிலும் விரிவடைந்து கொண்டு இருக்கிறது.

உள்கட்டமைப்பு, கல்வி, கற்றல் செயல்முறை மற்றும் பிற தொடர்புடைய அம்சங்கள் அனைத்திலும் 5டி திட்டத்தின் கீழ் பள்ளிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. மேம்பட்ட நவீன விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் கலாச்சாரம், ஆய்வகங்கள், அறிவியல் சென்டர்கள் அடங்கிய வகையில் தனித்துவமான கல்வியை இந்த திட்டம் உறுதி செய்கிறது. அதோடு 5டி திட்டத்தின் மூலம் ஆசிரியர்களும் தேவையான பயிற்சிகளை பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

மாணவர்களை மனதில் வைத்து இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சிகளை வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. 21ம் நூற்றாண்டுக்கு ஏற்றபடி புதிய தொழில்நுட்பங்க கற்றுகொடுக்கப்பட்டு ஆசியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இதற்காக "Code Club" போன்ற நிகழ்வுகள் நடதப்படும். இதில் ஆசியர்களுக்கு புதிய பாடம் எடுக்கும் முறை, மாணவர்களிடம் ஆலோசிக்கும் முறை, என்று பல விஷயங்கள் பயிற்றுவிக்கப்படும். இந்த 5டி திட்டம் மூலம் ஒடிசாவில் கல்வித் துறை புதிய உச்சம் தொட்டுள்ளதோடு மக்கள் மத்தியிலும் இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

(இந்த கட்டுரையை எழுதிய மனோஜ் மிஸ்ரா ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சிறப்பு அதிகாரி ஆவார். மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவரை [email protected] இல் தொடர்பு கொள்ளலாம்)

English summary
The transformation process being undertaken in the field of education in Odisha under the leadership of Chief Minister Naveen Patnaik is getting recognized by all. It is not only an initiative to systematize the teaching process and develop the infrastructure of the schools but also a revered attempt to get it reflected in each individual. The endeavor is to bring to the fore the hidden talent of the student and develop that into proficiency while giving them an environment that will help them get the most out of themselves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X