For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீல நிறத்துக்கு மாறிய ஷகாலாவின் கால்.. அதிர்ந்து ஓடிய பள்ளி குழந்தைகள்... கேரளாவில் ஷாக்!

வகுப்பறையில் பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலியானாள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நீல நிறத்துக்கு மாறிய ஷகாலாவின் கால்.. அதிர்ந்து ஓடிய பள்ளி குழந்தைகள்

    கோழிக்கோடு: "கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் ஷகாலாவின் கால் ப்ளு கலரில் மாறிடுச்சு.. அந்த சின்ன ஓட்டைக்குள்ளே பாம்பு வரும்னு எங்களுக்கு தெரியாது.." என்று அதிர்ச்சி விலகாமல் கண்ணீர் மல்க சொல்கின்றனர் பள்ளி மழலைகள்!

    கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீஸ் அப்துல் அஜிஸ். இவரது மகள் ஷகாலா. வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஷகாலா ஷெரின் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளுக்கு 10 வயதாகிறது!

    5th std student death snake bite in class room near kozhikode

    நேற்று வழக்கம் கிளாசில் உட்கார்ந்திருந்தாள் ஷகாலா.. அப்போது, மதியம் 3 மணி இருக்கும்.. கிளாஸ் ரூமில் இருந்த சுவற்றில் ஒரு ஓட்டை இருந்தது.. அந்த ஓட்டைக்குள் விளையாட்டாக தனது காலை விட்டுள்ளார்.. அப்போதே ஏதோ நறுக்கென கடிக்கவும், காலை உடனே வெளியே எடுத்துவிட்டாள்.

    ஆனால் காலில் அந்த இடத்தில் ரத்தம் வந்தது.. இதை தன் வகுப்பு தோழிகளிடம் ஷகாலா காட்ட, அதற்குள் டீச்சரும் கிளாசுக்குள் வந்துவிட்டார். ஷகாலாவின் காலில் பாம்பு போல கடித்ததற்கான அடையாளம் தெரிந்தது. அதனால் உடனே பள்ளி நிர்வாகம் ஷகாலாவின் பெற்றோருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, சுல்தான் பத்தேரி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், மாணவி எதனால் மயங்கி விழுந்தாள், பாம்பு கடித்துதான் இறந்தாளா என்பதை டாக்டர்களால் உறுதி செய்ய முடியவில்லை. அதனால், கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொல்லவும், பெற்றோரும் மகளை அங்கு தூக்கி சென்றனர். ஆனால் அதற்குள் ஷகாலா பரிதாபமாக இறந்துவிட்டாள். இதை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    டாக்டர்களின் கவனக்குறைவினால்தான் தங்கள் மகள் இறந்துவிட்டாள் என்றும், பாம்பு கடித்ததும், டாக்டர்கள் அதை கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை தந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டினர். காலையில் பள்ளிக்கு கிளம்பி சென்ற குழந்தை.. பாம்பு கடித்து.. அதற்கு முறையான சிகிச்சையும் இல்லாமல் பரிதாபமாக இறந்த சம்பவம் கோழிக்கோட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    10year old girl died due to snake bite in her class room near kozhikode and parents protest against
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X