For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன? தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது? இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவம் இடையே நடந்து வரும் சண்டை குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை!

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவம் இடையே நடந்து வரும் சண்டை குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் இந்த சண்டை நடந்து வருகிறது.

    இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!இதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி? நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி!

    இயல்புநிலை

    இயல்புநிலை

    இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் யாரோ இந்தியாவிற்கு உள்ளும், வெளியேயும் இருந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் காஷ்மீரில் அமைதியை குலைக்க முயன்று வருகிறார்கள். இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனால் யாரோ இந்தியாவிற்கு உள்ளும், வெளியேயும் இருந்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் காஷ்மீரில் அமைதியை குலைக்க முயன்று வருகிறார்கள்.

    எல்லை எப்படி

    எல்லை எப்படி

    சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதில் இருந்தே எல்லை பகுதியில் இது போல தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். காஷ்மீரில் மக்களின் ஓற்றுமை மற்றும் அமைதியை குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் செயல்பட முயன்று வருகிறார்கள்.

    என்ன முயற்சி

    என்ன முயற்சி

    கடந்த ஒரு மாதமாக பிஓகே பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தங்களது தீவிரவாத முகாமை முன்னோக்கி நகர்த்த முயல்கிறார்கள். நேற்று மாலை டங்தார் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

    கடுமையான தாக்குதல்

    கடுமையான தாக்குதல்

    அதே சமயம் பார்த்து எங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் நாங்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அங்கு இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குகள் நடத்தினோம். மிகவும் கடுமையான தாக்குதலை நாங்கள் அங்கு செய்தோம்.

    என்ன பாதிப்பு

    என்ன பாதிப்பு

    இதில் தீவிரவாத முகாம்கள் மோசமாக பாதிப்படைந்தது. அவர்களின் முகாம்கள் பல மொத்தமாக அழிந்தது. இதில் 6-10 பாகிஸ்தான் வீரர்கள் இறந்திருக்கலாம். 3 முகாம்கள் மொத்தமாக அழிந்துவிட்டது. அதே அளவு தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று பிபின் ராவத் கூறியுள்ளார் .

    English summary
    6-10 Pakistani soldiers have been killed, 3 camps have been destroyed in today attack says Army Chief General Bipin Rawat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X