For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தி பிறந்த மண்ணில் கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்... இந்து மகாசபையினர் கைது

Google Oneindia Tamil News

சூரத்: குஜராத்தில் கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடியதாக 6 இந்து மகாசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசதந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பாராமதியில் மே 19ம் தேதி 1910ம் ஆண்டு பிறந்தார்.

6 Hindu Mahasabha activists arrested in Gujarat for celebrating Godse birthday

சூரத்தின் லிம்பாயத் பகுதியில் சூர்யமுகி ஹனுமான் கோயில் உள்ளது. இங்கு கடந்த 19ம் தேதி கோட்சேவின் பிறந்த நாளை இந்து மகாசபை உறுப்பினர்கள் கொண்டாடினார்கள். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அனுமதி இன்றி கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக 6 இந்து மகாசபை உறுப்பினர்களை சூரத் போலீசார் கைது செய்தனர்.

பரபரக்கும் புதிய எக்சிட் போல்.. அதிமுகவின் எஃகு கோட்டையான கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பரபரக்கும் புதிய எக்சிட் போல்.. அதிமுகவின் எஃகு கோட்டையான கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

இது தொடர்பாக சூரத் போலீஸ் கமிஷ்னர் சதீஷ் சர்மா கூறுகையில், "இந்து மகாசபை உறுப்பினர்கள் கோயிலுக்குள் அனுமதி இன்றி புகுந்து கோட்சேவின் புகைப்படங்களை வைத்து பிறந்த நாள் கொண்டாடியதோடு , இனிப்புகள் பரிமாறியும் பஜனை பாடி உள்ளனர். மேலும் இந்த நிகழ்வை அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாடியது பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது. எனவே இந்து மகாசபையினர் மீது பொதுமக்களிடையே சச்சரவை தூண்டுதல் , அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றார்.

English summary
Hindu Mahasabha activists arrested after celebration of Godse birthday at a temple in Surat’s Limbayat area on Sunday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X