For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி: தினசரி 6 பலாத்காரங்கள், 14 மானபங்க வழக்குகள்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தினசரி 6 பலத்காரங்கள், 14 மானபங்க வழக்குகள்...

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் நாள்தோறும் 6 பலாத்கார வழக்குகளும், 14 மானபங்க வழங்குகளும் பதிவாகிவருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 90 சதவிகித குற்றங்களுக்கு தீர்வு காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிவரை 616 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது. 1336 மானபங்க வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளன.

36% அதிகம்

36% அதிகம்

கடந்த ஆண்டினைக் காட்டிலும் இது 36% அதிகமாகும். 2013ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 450 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின.

குற்றங்களுக்கு தண்டனை

குற்றங்களுக்கு தண்டனை

கடந்த 4 மாதங்களில் 89 சதவிகித வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2013ம் ஆண்டில்

2013ம் ஆண்டில்

கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 1559 பலாத்கார வழக்குகளும், 3347 மானபங்க வழக்குகளும் பதிவானது. அதேசமயம் 2012ம் ஆண்டு 680 பலாத்கார வழக்குகளும், 653 மானபங்க வழக்குகளும் பதிவாகியுள்ளது.

பலாத்கார தலைநகரம்

பலாத்கார தலைநகரம்

தேசிய குற்றப்பிரிவு ஆவணங்களில் கொடுத்துள்ள புள்ளிவிபரத்தின் படி 2011ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் 568 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது. அதேசமயம் மும்பையில 218 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஓடும் பேருந்தில்

ஓடும் பேருந்தில்

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலினால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் பெண்கள் கொதித்து எழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இதைத்தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன.

ஹெல்ப்லைன்

ஹெல்ப்லைன்

பெண்களுக்கு உதவி செய்வதற்காக நிறுவப்பட்டுள்ள ஹெல்ப்லைனில் தினசரி 30 அழைப்புகள் போலீசாரால் பெறப்படுகின்றன. கடந்த 4 மாதங்களில் மட்டும் 11439 அழைப்புகள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Delhi Police figures yet again show that the city is unsafe for women. Data of the first four months of 2014 show that six rapes and 14 molestation cases have been reported every day. Police, however, claim to have solved almost 90% of the cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X