• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

BREAKING NEWS: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

By Shyamsundar
|

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலியாகிவிட்டனர். அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபத்திரியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. விஷவாயு கசிவால் காயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Newest First Oldest First
7:16 PM, 12 Jul
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி

தாடிபத்திரியில் தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலி

விஷவாயு கசிவால் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

6:44 PM, 12 Jul
சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது - நீதிபதி கிருபாகரன் கேள்வி- நீதிபதி கிருபாகரன் கேள்வி

வீதிமீறல் கட்டடங்களை தடுக்க தவறிய சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது- நீதிபதி

2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை

ஆக்கிரமிப்பாளர்களிடம்அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன

நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே சென்னை மிதந்தது என நீதிபதி வேதனை

5:35 PM, 12 Jul
காவலர்களுக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

4:42 PM, 12 Jul
இயக்குநர் கவுதமன் ஜாமீனில் விடுவிப்பு

ஐபிஎல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டார்

3:28 PM, 12 Jul
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

1:28 PM, 12 Jul
ரஜினி மன்றத்திலிருந்து ராஜு மகாலிங்கம் நீக்கம்?

மன்றம் பக்கமே வரக் கூடாது என்று ரஜினி உத்தரவிட்டுள்ளதாக தகவல்

மன்றத்தினர் யாரும் ராஜு மகாலிங்கத்துடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கை

1:00 PM, 12 Jul
பெங்களூரில் இரு இண்டிகோ விமானங்கள் நடு வானில் மோத இருந்த விபத்து தவிர்ப்பு

அதிருஷ்டவசமாக 330 பயணிகள் உயிர் தப்பினர்

விசாரணைக்கு உத்தரவு பிறப்பிப்பு

12:58 PM, 12 Jul
சென்னையில் ரவுடி தனசேகர் கொலை வழக்கில் இருவர் கைது

திருவான்மியூரில் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார் ரவுடி தனசேகர்

முன் விரோதத்தால் கொலை செய்த ரவுடிகள் ராஜா, பாரதி ஆகியோர் கைது

11:31 AM, 12 Jul
மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

உயர்நிலைக்குழுவில் இருந்து ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமனம்

10:50 AM, 12 Jul
கமல்ஹாசன் கட்சி நிகழ்ச்சியால் போக்குவரத்து நெரிசல்

ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றுகிறார் கமல்ஹாசன்

ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்ததால் ஆழ்வார்பேட்டை சிக்னல் பகுதியில் டிராபிக் ஜாம்

9:45 AM, 12 Jul
சென்னை அடையாறு பகுதியில் பள்ளி அருகே ஒருவர் வெட்டி கொலை

குழந்தையை பள்ளியில் விட்டு திரும்பிய சுரேஷ் என்பவர் வெட்டி கொலை

9:42 AM, 12 Jul
புழல் சிறையில் கைதி-போலீசார் கைகலப்பு

போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையிலுள்ளவருடன் கைகலப்பு

நைஜீரியாவை சேர்ந்த நிக்கோலசுடன் போலீசாருக்கு லேசான கைகலப்பு

8:50 AM, 12 Jul
கிறிஸ்டி நிறுவன ஊழல்: ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து

கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த ஐ. டி ரெய்டு மூலம் மோசடி அம்பலமானது

சத்துணவு பொருட்களை அனுப்பும் அந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது

அந்நிறுவனம் ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்ததுள்ளது

8:26 AM, 12 Jul
சென்னையில் ரவுடி தனசேகர் வெட்டிக் கொலை

திருவான்மியூர் அவ்வை நகரில் தனசேகர் வெட்டிக் கொலை

காவல் நிலையத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போது கொடூரம்

8:14 AM, 12 Jul
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது - வானிலை மையம்

நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

மற்ற மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும்

8:14 AM, 12 Jul
காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

கபினியில் இருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றம்

ஒக்கேனக்கல் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கர்நாடகாவில் பெய்யும் கன மழையால் அதிக நீர் வெளியேற்றம்

 
 
 
English summary
Temporary high committee of the Makkal Needhi Maiam party is dissolved, party chief Kamal Haasan announced in Chennai on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X