For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 நிமிடங்களில் 60,000 மேகி பாக்கெட்டுகள் விற்பனை... ஆன்லைனில்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்நாப்டீல் இணையதளத்தில், ஆன்லைன் மேகி விற்பனை தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனமானது இந்தியாவில் மேகி நுாடுல்ஸ் உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது. இரண்டே நிமிடத்தில் தயாரிக்கலாம் என்ற வசதி காரணமாக நாடு முழுவதும் பிரபலமான உணவாகத் திகழ்ந்தது மேகி நூடுல்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம் மற்றும் ரசாயன உப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம், ‘மேகி நுாடுல்ஸ் பாதுகாப்பற்றது, உடல் நலனுக்கு தீங்கானது' எனக் கூறி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதற்கு தடை விதித்தது.

தடை...

தடை...

அதனைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள், மேகி நுாடுல்சுக்கு தடை விதித்தன. இதையடுத்து, சந்தையில் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருந்த நுாடுல்ஸ் வகைகளை நெஸ்லே திரும்பப் பெற்றது.

மீண்டும் ஆய்வு...

மீண்டும் ஆய்வு...

இது தொடர்பான வழக்கில் மும்பை ஹைகோர்ட் மேகி நூடுல்ஸ் உணவு வகைகளை தேசிய அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடங்களில் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டது. அதன் முடிவுகளின் படி, தேசிய தரச்சான்று வாரியம், 'மேகி நுாடுல்ஸ் மாதிரிகள் அனைத்தும் பாதுகாப்பானவை' எனச் சான்றளித்தது.

விற்பனை தொடக்கம்...

விற்பனை தொடக்கம்...

இதையடுத்து, மேகி நுாடுல்ஸ் உணவு வகைகள், கடந்த திங்களன்று மீண்டும் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இருப்பினும் தடை விதிக்கப்பட்ட எட்டு மாநிலங்களில் மேகியின் விற்பனை தொடங்கவில்லை.

ஆன்லைனில்...

ஆன்லைனில்...

எனவே, ஸ்நாப்டீல் இணைய வழி விற்பனை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆன்லைனில் மேகி நூடுல்ஸை விற்பனையை நெஸ்லே இந்தியா துவங்கியது. ஆன்லைனில் விற்பனை தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சுமார் 60 ஆயிரம் மேகி பாக்கெட்டுகள் விற்பனை ஆனது.

மேகி பாக்கெட்டில்....

மேகி பாக்கெட்டில்....

இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் 12 மேகி பாக்கெட்டுகளும், 2016ம் ஆண்டிற்கான மேகி காலெண்டர் ஒன்றும், குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டும் மேகி காந்தம் ஒன்றும், மேகி போஸ்ட் கார்ட்ஸ் மற்றும் வெல்கம் பேக் கடிதமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A couple of days after Maggi made a big comeback following the FSSAI ban, online marketplace Snapdeal on Thursday claimed that its first batch of 60,000 Maggi Welcome Kits was a sell-out within five minutes of the Maggi Flash Sale going live.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X