For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நான் பார்க்காத பாம்பா".. ஒரு பக்கம் கோபம் ஏற.. மறு பக்கம் விஷம் ஏற.. கடித்து துப்பிய தாத்தா!

தன்னை கடித்த பாம்பை முதியவர் கடித்து துப்பி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    'நான் பார்க்காத பாம்பா'கடித்து துப்பிய தாத்தா-வீடியோ

    காந்தி நகர்: "நான் பார்க்காத பாம்பா.. எத்தனை பாம்பை கொன்றிருப்பேன் தெரியுமா" என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அந்த பெரியவரை பாம்பு கொத்திவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முதியவரும் தன்னை கொத்திய பாம்பை கடித்து துப்பி உயிரிழந்தார்.

    குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்தவர் பர்வாத்சாலா பரியா. இவர் ஒரு விவசாயி. வயது 60.

    இவரது வயலில் மக்கா சோளம் அறுவடை நடைபெற்றது. அவற்றை எல்லாம் கூலியாட்கள் ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதை பக்கத்தில் நின்று பர்வாத்சாலா கண்காணித்தவாறே இருந்தார்.

    பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய 2 இளைஞர்கள்.. ஒரு மாணவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு! பள்ளியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய 2 இளைஞர்கள்.. ஒரு மாணவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு!

    அலறி ஓட்டம்

    அலறி ஓட்டம்

    அந்த நேரம் பார்த்து மக்கா சோளத்துக்குள் இருந்து ஒரு நல்ல பாம்பு வந்துவிட்டது. அங்கிருந்து போகாமல், அதே இடத்தில் படம் எடுத்து ஆடியது. பாம்பை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    பயம் இல்லை

    பயம் இல்லை

    ஆனால் பர்வத்சாலா மட்டும் ஓடவில்லை. அங்கிருந்தவர்களிடம், "நான் பார்க்காத பாம்பா, எத்தனையோ பாம்புகளை கையாலேயே பிடித்து நசுக்கி கொன்றிருக்கிறேன். கடித்தும் கொன்றிருக்கிறேன்" என்று சொல்லி கொண்டிருந்தார்.

    நறுக்கென கடித்தார்

    நறுக்கென கடித்தார்

    அந்த நேரம் பார்த்து நல்ல பாம்பு பர்வாத்சாலாவின் காலில் கொத்தியது. இதனால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சீறிக் கொண்டிருந்த பாம்பை தன் கையால் அலேக்காக பிடித்தார். உடனே பாம்பு பர்வாத்சாலா கை மற்றும் முகத்தில் கொத்தியது. விஷம் ஒரு பக்கம் ஏற, கோபம் ஒரு பக்கம் ஏற பர்வத்சாலா தன்னை கொத்திய பாம்பை நறுக்கென கடித்து துப்பினார்.

    மயங்கி விழுந்தார்

    மயங்கி விழுந்தார்

    ஏற்கனவே கொத்தி விஷம் உடம்பில் ஏற, பாம்பை இவர் போய் கடித்து துப்பியதால் அதன் மூலமாகவும் விஷம் ஏற, சிறிதுநேரத்தில் உடம்பெல்லாம் விஷம் பரவிவிட்டது. இதனால் அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Gujarat farmer got bitten by Poisonous snake he retaliated by biting it back
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X