For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனி மதமாக அறிவித்த கர்நாடக அரசுக்கு பெரும்பாலான லிங்காயத்துகள் ஆதரவு.. பாஜக ஓட்டு வங்கியில் ஓட்டை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் மீண்டும் காங். ஆட்சி.. வெளியானது பரபரப்பு சர்வே..வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது என்று சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தின், 61 சதவீத லிங்காயத்து மக்கள் தங்களுக்கு தனி மத அந்தஸ்து வழங்கிய சித்தராமையா அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்.

    லிங்காயத்துகள் பொதுவாக பாஜக வாக்கு வங்கிகளாக உள்ள நிலையில், அவர்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து சிறுபான்மை மதமாக அங்கீகரித்துள்ளது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு.

    61 per cent Lingayats back religious minority tag says survey

    அரசின் முடிவுக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதால், அந்த வாக்குகள் காங்கிரஸ் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், 32 சதவீத லிங்காயத்து பிரிவினர், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 7 சதவீதத்தினர் அதைப் பற்றி கருத்துக் கூறவில்லை.

    கர்நாடகாவில் ஹிந்தி அடையாளங்களை அகற்றுவது உட்பட பல விவகாரங்கள் பற்றியும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெங்களூரு மெட்ரோ நிலையங்களில் இருந்து ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்படுவதற்கு 92% பேர் ஆதரவு தெரிிவித்தனர். பாஜக கர்நாடகாவில் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது என்ற சித்தராமையாவின் குற்றச்சாட்டுகளில் 59 சதவீதம் பேர் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    56 சதவீதம் பேர் கர்நாடகாவிற்கு தனி கொடியை சித்தராரமையா அரசு அறிமுகம் செய்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    English summary
    At least 61 per cent of the Lingayat voters said that they backed the decision of the government to grant separate religion status to the Lingayats. While 61 per cent supported the move, 32 per cent said no to the move while 7 per cent had no opinion about it says a survey.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X