For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோலை யார் அதிகமாக குடிக்கிறாங்க தெரியுமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டேதான் போகிறது. ஆனாலும் விலை உயர்வைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த தெருவுக்குப் போய் பேப்பர் வாங்கப் போனாலும் டூவீலரில் போகும் மிஸ்டர் மிடில்கிளாஸ் பொதுஜனங்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

கார் வைத்திருப்பவர்களை விட டூவிலர் வைத்திருப்பவர்கள்தான் இந்தியாவில் பெட்ரோலை அதிகம் பயன்படுத்துகின்றனராம்.

நாட்டில் பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கே செல்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது.

எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி தற்போது 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் செலவு ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 432 கோடியாகி இருக்கிறது.

இருசக்கர வாகனங்கள்தான்

இருசக்கர வாகனங்கள்தான்

இந்தியாவில் பெட்ரோலை அதிகம் பயன்படுத்துவது இருசக்கர வாகனங்கள்தான் என்றும் மொத்த பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கே செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்கூட்டர் பயன்பாடு

ஸ்கூட்டர் பயன்பாடு

இது தொடர்பான ஆய்வு ஒன்றினை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்காக தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அதில் தற்போது பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் போன்ற இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள் என தெரியவந்தது

கார்கள்

கார்கள்

பணக்காரர்கள் அதிகம் பயன்படுத்தும் கார்களுக்கு 27 சதவீதம் பெட்ரோல் பயன்படுகிறது.

மூன்று சக்கர வாகனங்கள்

மூன்று சக்கர வாகனங்கள்

ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கு 6 சதவீதம் பெட்ரோலும், 2 சதவீதம் இதர உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

டீசல் தேவை

டீசல் தேவை

நாட்டின் டீசல் தேவை 69 மில்லியன் டன் ஆக உள்ளது. இதில் போக்குவரத்துக்காக 66 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது. டாக்சி போன்ற வர்த்தக வாகனங்கள், பஸ்கள், லாரிகள், மினி வேன்களுக்காக மட்டும் 38 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயத்திற்கு

விவசாயத்திற்கு

விவசாயத்துக்காக 19 சதவீத டீசல் பயன்படுகிறது. மீன் பிடி படகுகள் போன்றவற்றுக்கும் டீசல் பயன்படுகிறது. 2 சதவிகிதம் மொபைல் டவர்களில் பயன்படுத்தப்படுகிறதாம்.

தென் மாநிலங்களில் அதிகம்

தென் மாநிலங்களில் அதிகம்

4 மண்டலங்களில் தென் மாநிலங்களில்தான் போக்குவரத்துக்காக 77 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அடிக்கடி கரண்ட் கட் ஆவதால் ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கே அதிக டீசல் செலவாகிறது.

வடமாநிலங்களில்

வடமாநிலங்களில்

வடமாநிலங்களில் இதற்கான பயன்பாடு 59 சதவீதம், வட மாநிலங்களில் விவசாயத்துக்காக 24 சதவீதம், தென் மாநிலங்களில் 10 சதவீதமும் டீசல் பயன்படுகிறது.

டீசல் கார்கள்

டீசல் கார்கள்

கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்களினால் 19 சதவிகிதம் டீசல் செலவாகிறதாம்.

இனி சொல்ல மாட்டாங்க

இனி சொல்ல மாட்டாங்க

மானியத்தை குறைப்பதற்காக பெட்ரோலை பணக்காரர்களின் எரிபொருள் என்று சொல்லிவந்த மத்திய அரசு இனி இந்த ஆய்வு முடிவைப் பார்த்து தங்களின் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
The government touted petrol as rich man's fuel to stop subsidy. But a latest survey shows 62% of the fuel flowing into the market is consumed by the aam aadmi's sawari — two-wheelers — while about 2% is being sold loose by people to earn their livelihood in remote villages and coastal areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X