For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஞ்சத்தில் இந்தியா முதல் இடம்.. ஆய்வில் ஷாக் தகவல் !

வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது என லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ஆசிய பசுபிக் மண்டலத்தில் 69 சதவீத இந்தியர்கள் பொது சேவைகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளின் ஊழல், லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்தது. 16 நாடுகளில் சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்திய அந்த ஆய்வின் முடிவில் லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

 69% Indians have to pay bribe says the report.

இந்தியாவைத் தொடர்ந்து வியட்நாம் நாட்டினர் 65 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் 40 சதவீதம் பேரும், சீனாவில் 26 சதவீதம் பேரும், தென்கொரியாவில் 3 சதவீதம் பேரும் லஞ்சம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் 0.2% பேர் மட்டுமே லஞ்சம் பெறுகின்றனர். இந்தியாவில் 10 பேரில் 7 பேர் அரசின் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கிறார்களாம். முறைகேடுகளுக்கு லஞ்சம் வழிவகுப்பதால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலிறுத்தி உள்ளது.

English summary
India had the highest bribery rate among the 16 Asia Pacific countries surveyed by Transparency International.69% Indians have to pay bribe says the report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X