For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி

Google Oneindia Tamil News

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்குமாடி கட்டடத்தில் 13 ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்க போராடிய 7 பேர் பலியாகிவிட்டனர்.

கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் ரயில்வே கட்டடம் உள்ளது. இங்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 13ஆவது மாடியில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியில் தீப்பிழம்பு போல் காட்சியளித்தது.

7 die dousing Railways building fire in Kolkatta

இதையடுத்து தகவலறிந்து தீயணைக்க முதலில் 10 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்குப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து 110 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 6500 வீரர்கள் ஈடுபட்டனர். இதில் 4 தீயணைப்பு வீரர்கள், இரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு கொல்கத்தா போலீஸ் அதிகாரி என 7 பேர் பலியாகிவிட்டனர்.

சம்பவ இடத்தை முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என மம்தா அரசு அறிவித்துள்ளது.

English summary
7 died of Railways building fire accident in Kolkatta. Mamata Government annonces Rs 10 lakh Ex gratia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X