70 வயது பிரான்ஸ் மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. மோடி தொகுதியிலேயே நடந்த அவலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாரணாசி: வாரணாசியில் 70 வயது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1977-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 70 year old women who brutally raped in Varanasi

இந்நிலையில் தொண்டு நிறுவன வேலைக்காக கடந்த 11 மாதமாக ரோகானியா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் நேற்று இரவு முன்தினம் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு செல்போனை பறித்து கொண்டு ஓடிவிட்டார்.

இச்சம்பவத்தை கேள்வி பட்ட அக்கம்பக்கத்தின் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பாதுகாவலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாரணாசி பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாகும். இதோடு உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு எதிரான குற்றச் செயலலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். யோகி ஆத்தியநாத்தின் 100 நாள் ஆட்சி இந்த வாரத்தோடு முடிகின்ற நிலையில் இப்படி ஒரு கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 70-year-old French woman was allegedly beaten up and raped in Varanasi last night, the police said
Please Wait while comments are loading...