For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஒரு பேரழிவை பார்த்ததே இல்லை.. புயலால் மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி.. மமதா பானர்ஜி குமுறல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: அம்பன் புயல் காரணமாக, மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகியுள்ளதாக, அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Recommended Video

    Cyclone Amphan : Modi Insulted By Mamata Banerjee?

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெற்று, நேற்று மாலை மேற்கு வங்க மாநிலம் சுந்தரவனக் காடுகளில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசியது. அம்பன் என பெயரிடப்பட்ட இந்த புயல், முதலில் சூப்பர் புயல் என்ற நிலையை எட்டி, பிறகு சற்று வலுவிழந்து அதி தீவிர புயலாக கரையை கடந்தது.

    72 people have died in West Bengal due to amphan cyclone

    இந்த புயலால், கொல்கத்தா நகரம் சீர்குலைந்து போயுள்ளது. விமான நிலையத்தில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நகரில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது உட்பட மேற்கு வங்க மாநிலம் முழுக்க 72 பேர் வரை பலியாகியுள்ளதாக இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த மமதா பானர்ஜி தெரிவித்தார்.

    அலறிய ஊட்டி.. ஆக்ரோஷத்துடன் சுழட்டி சுழட்டி அடித்த சுழல் காற்று.. தெறித்து ஓடிய மக்கள்!!அலறிய ஊட்டி.. ஆக்ரோஷத்துடன் சுழட்டி சுழட்டி அடித்த சுழல் காற்று.. தெறித்து ஓடிய மக்கள்!!

    72 people have died in West Bengal due to amphan cyclone

    "நான் இதற்கு முன்பு இப்படி ஒரு பேரழிவை பார்த்தது கிடையாது, எனவே மேற்கு வங்க மாநிலத்துக்கு பிரதமர் உடனடியாக நேரில் வந்து நிலைமையை நேரில் பார்த்து உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    72 people have died in West Bengal due to amphan cyclone
    English summary
    72 people have died in West Bengal so far due to cyclone, says West Bengal Chief Minister Mamata Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X