For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழியும் 8 இந்தியப் பறவைகள்– சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் அதிர்ச்சித் தகவல்!

Google Oneindia Tamil News

மும்பை: உலகில் அழிந்து வரும் இயற்கை உயிரினங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 8 பறவை இனங்களும் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் 8 இந்தியப் பறவைகளும் அழிவின் பிடிவில் இருப்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச பறவைகள் வாழ்வமைப்பு:

சர்வதேச பறவைகள் வாழ்வமைப்பு:

மும்பை இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அழிந்து வரும் பறவைகள்:

அழிந்து வரும் பறவைகள்:

இதில் இந்தியாவில் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் விரைவில் 173 பறவை இனங்கள் இடம் பெறும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்தியப் பறவைகளும் அடக்கம்:

இந்தியப் பறவைகளும் அடக்கம்:

மேலும் இந்த பட்டியலில் இந்திய பறவை இனங்களான கம்பளி கழுத்து நாரை, அந்தமான் நீலம், சிவப்பு தலை ஆந்தை, இமாலயன் கிரிபான், தாடி கழுகு, அந்தமான் பச்சை புறா, சாம்பல் நிற தலை பச்சை புறா, யுனன் நியுதாச் ஆகிய 8 பறவை இனங்கள் இடம் பெற்று உள்ளன.

பட்டியல் காட்டும் உண்மை:

பட்டியல் காட்டும் உண்மை:

காட்டு தீ, பெருகி வரும் கட்டிடங்களால் அழிந்து வரும் காடுகள், வேட்டையாடுதல், அதிகரிக்கும் வேதியியல் பொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் அரியவகை பறவை இனங்கள் அழிந்து வருவதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Eight species of Indian birds have been added to the endangered list owing to relentless habitat destruction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X