For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா சபாநாயாகராகிறார் 8 முறை எம்.பியாக வென்ற சுமித்ரா மகாஜன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எட்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுமித்ரா மகாஜன் லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

லோக்சபாவின் புதிய சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் அத்வானி நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை அத்வானி விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ம.பி.யை சேர்ந்தவர்

ம.பி.யை சேர்ந்தவர்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் 1943ஆம் ஆண்டு பிறந்தவர்.

இந்தூர் தொகுதி

இந்தூர் தொகுதி

1989ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தின் இந்தூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருவர்.

இணை அமைச்சர்

இணை அமைச்சர்

2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார்.

4 லட்சம் வாக்குகள் வித்தியாசம்

4 லட்சம் வாக்குகள் வித்தியாசம்

தற்போதைய லோக்சபா தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 4 லட்சத்து 66 ஆயிரத்து 301 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் சுமித்ரா மகாஜன்.

தற்போது இவரையே லோக்சபா சபாநாயகராக்கிவிட பாஜக முடிவு செய்துள்ளது.

English summary
Sources told that senior BJP leader and eight-time MP from Indore Sumitra Mahajan could be named the Lok Sabha Speaker. Ms Mahajan is the longest serving woman parliamentarian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X