For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேணாம்பா… போதும்பா இந்த அரசியலு! பிஎச்டி மாணவராக மாறி கல்லூரி செல்லும் 81 வயது முன்னாள் எம்எல்ஏ

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்:ஒரிசா மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ, எம்பி என பல பதவிகளை வகித்த நீண்ட அரசியல்வாதி ஒருவர், தமக்கு அரசியல் வாழ்வு போதும் என்று முடிவெடுத்து, கல்லூரி வகுப்பறையில் சக மாணவர்களுடன் அமைந்து பாடம் படித்து வருகிறார்.

வாழ்க்கையில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. பிச்சை எடுத்தாவது கல்வி பயில வேண்டும் என்பது அவ்வை மூதாட்டியின் வாக்கு. எந்த சந்தர்ப்பத்திலும் மனிதனின் வாழ்க்கைக்கு உதவுவது கல்வி என்பது ஆன்றோர்களின் கருத்து.

அதேபோல, கல்வி கற்க என்றும் வயது தடையில்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் ஏற்கனவே இருக்கின்றன. கல்வியின் முக்கியத்துவத்தை கருதி தான், ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் என்பதை அன்றே உலகுக்கு உணர்த்தியவர் கல்விக்கண் திறந்த காமராஜர்.

ஒடிசா அரசியல்வாதி

ஒடிசா அரசியல்வாதி

தற்போது இயந்திரத்தனமாகி விட்ட இந்த காலத்தில் கல்வி கற்பது என்பது மிக சாதாரணமாகிவிட்டாலும் கிராமப்பகுதிகளில் அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருப்பதை நாம் காணலாம்.ஆனால்,அதையும் வென்று காட்டும் பலரும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் வித்தியாசமானவராக இருப்பவர் தான் இந்த ஒடிசா மாநில அரசியல்வாதி.

பிஎச்டி படிக்கும் நாராயண் சாஹூ

பிஎச்டி படிக்கும் நாராயண் சாஹூ

ஒரிசாவை சேர்ந்த 81 வயது மூத்த அரசியல்வாதி நாராயண் சாஹூ. இரண்டு முறை ஒரிசா எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியுமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அரசியல் வாழ்வில் வெறுத்து ஒதுங்கி, மீண்டும் தனது கல்வியை தொடரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

46 வருடங்கள் கழித்து…

46 வருடங்கள் கழித்து…

1963ம் ஆண்டு ராவென்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்ற சாஹூ, பின்னர் அரசியலில் ஓகோவென்று வலம் வந்தார். 2009ம் ஆண்டு... கிட்டத்தட்ட 46 ஆண்டுகள்... கழித்து உத்கல் பல்கலைகழகத்தில் தனது பட்ட மேற்படிப்பினை முடித்தார்.

நிற்காத கல்வி தாகம்

நிற்காத கல்வி தாகம்

அதன் பின்னர் 2012ம் ஆண்டு எம்பில் பட்டம் பெற்றார். அத்துடன் அவரது கல்வி தாகம் நிற்கவில்லை. தற்போது அவர் பிஎச்டி பட்டத்தை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக ஒரிசாவின் உத்கல் பல்கலை கழகத்தில் சேர்ந்துள்ளார்.

ஹீரோவாக வலம்

ஹீரோவாக வலம்

சகமாணவர்களுடன் கல்லூரி வகுப்பறைக்கு சென்று பயின்று வரும் சாஹூ, அப்பகுதியில் மூத்த வயது ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். வகுப்பறையில் தான் மாணவர்களுடன் இருக்கிறார் என்று பார்த்தால்.. தற்போது மாணவர்களுடன் மாணவராய் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

அன்பான மாணவர்கள்

அன்பான மாணவர்கள்

சிறிய படுக்கை, பாடாய்படுத்தும் கொசுக்களுக்கு இடையில் எளிமையாக தமது கல்வியை தொடருகிறார். சக மாணவர்களும் அவரை உற்ற தோழனாக கருதி அன்பாக பழகி வருகின்றனர். அவருடன் கல்வியை தவிர்த்து, அரசியல் குறித்தும் பேசி கருத்துகளை தெரிந்து கொள்கின்றனர்.

நான் நேசித்த அரசியல்

நான் நேசித்த அரசியல்

தற்போது முற்றிலுமாக அரசியலைவிட்டு வெளியேறி பிஎச்டி படித்து வரும் கூறியதாவது:
நான் அரசியலில் சேர்ந்த ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலை நேசித்தேன். ஆனால் அரசியல் எப்போது தவறாக செல்கிறது என்பதை என்று நான் உணர்ந்தேனோ, அப்போதே விரக்தி ஏற்பட்டது. அதனால் நான் படிப்பை தொடர நினைத்தேன்.

அரசியலில் கொள்கை இல்லை

அரசியலில் கொள்கை இல்லை

அரசியலில் எந்த வரைமுறையும், கொள்கைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. எனக்கு பிஎச்டி படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார். சாஹூவின் கல்லூரி காலத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு பட்ட மேற்படிப்பு தடுக்கப்பட்டதாகவும், சாஹூ அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் மேற்படிப்பை தொடர முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதுவே அவரது 81 வயதிலும் கல்விகற்க ஒரு காரணமாக அமைந்துவிட்டது எனலாம்... சபாஷ் சாஹூ!!

English summary
Exemplifying that there is no age bar for learning, an 81 year old former parliamentarian and ex-MLA Narayan Sahu is pursuing his Ph.D. program as a common scholar from a University in odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X