For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: சேலம் பசுமை சாலைக்கு 85% நிலத்தை அளவு எடுத்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு

சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

85% of Marking of land for Salem 8 lane project are over, says CM  - LIVE UPDATES

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அதில், சேலம் சாலைக்கு 85% பகுதிகளில் நில அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் இதுவரை 90 சதவிகிதம் நிலம் ல அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் நிலம் அளவீடு எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. என்றுள்ளார்.

Newest First Oldest First
8:31 PM, 18 Jul

சீமான் கைது: தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்

கூமாங்காடு கிராமத்தில் சீமான் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது

ஆட்சியாளர்களும் காவலர்களும் ஜனநாயகத்தின் துகிலுரிந்து துச்சாதனர்கள் ஆகியுள்ளார்கள்

சீமானை கைது செய்தது சட்ட விரோதச் செயலாகும் - பெ. மணியரசன்

7:21 PM, 18 Jul

முட்டை டெண்டர் - முதல்வர் விளக்கம்

தமிழக அரசின் முட்டை டெண்டரில் முறைகேடு எதுவும் இல்லை

இதுவரை சரியாக முட்டை டெண்டர் விடப்பட்டுள்ளது

செலவை குறைக்கவே முட்டை டெண்டர் நடத்த திட்டமிடப்பட்டது

எல்லா மாதமும் டெண்டர் நடத்த முடியாது

ரூ.2031 கோடிக்குத்தான் முட்டை டெண்டர் விடப்பட்டது

ரூ.5000 கோடி ஊழல் என்பதெல்லாம் சுத்த பொய்

7:18 PM, 18 Jul

தமிழகத்தில் எல்லா அணைகளும் நிரம்பியுள்ளது

திமுக ஆட்சியில்தான் டெண்டரில் முறைகேடு நடந்தது

தமிழக அரசு இப்போது நன்றாக செயல்படுகிறது

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் வைக்கப்படுகிறது

வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்று

அவர்களுக்கு சந்தேகம் வந்தால், புகார் வந்தால் சோதனை செய்வார்கள்

சேலம் சாலைக்கு 85% நிலம் எடுக்கப்பட்டுள்ளது

7:15 PM, 18 Jul

தமிழக அரசின் டெண்டரில் முறைகேடில்லை - முதல்வர் பழனிச்சாமி

தமிழக அரசு எந்த ஊழலும் செய்யவில்லை

ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளது

கோவை விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி

6:57 PM, 18 Jul

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது

நீர்வரத்து 1,04,000 கன அடியில் இருந்து 1,08,000 கன அடியாக அதிகரிப்பு

பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படுகிறது

5:15 PM, 18 Jul

12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை

மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

4:56 PM, 18 Jul

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

அயனாவரம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம்

சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்

4:54 PM, 18 Jul

குகையில் இருந்து மீண்ட தாய்லாந்து சிறுவர்கள் பேட்டி

சிகிச்சைக்கு பின் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்

நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருந்து செய்தியாளர்கள் வருகை

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள்

4:27 PM, 18 Jul

நீதிமன்றத்தில் குற்றவாளிகளை தாக்கியிருக்க கூடாது- கமல்ஹாசன்

கடுமையான தண்டனையை விரைந்து நீதிமன்றம் வழங்க வேண்டும்

4:27 PM, 18 Jul

சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி

வருமான வரித்துறை ரெய்டு கண்துடைப்போ- கமல் சந்தேகம்

4:23 PM, 18 Jul

8 வழிச்சாலை திட்டத்துக்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள்- தமிழக அரசு

சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்

எட்டு வழிச்சாலைக்காக மக்களை அணுகுவதில் நிதானம் இல்லை- நீதிபதி

8 வழிச்சாலை பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

3:36 PM, 18 Jul

சபரிமலை கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

சபரிமலை கோயிலில் எதன் அடிப்படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது

தற்போது 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அனுமதி

2:06 PM, 18 Jul

பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து

அதிருஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தப்பினர்

கட்டிட பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

2:02 PM, 18 Jul

சென்னை சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை?

ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்

2:00 PM, 18 Jul

முதல்வரை சந்திக்க கோழிப் பண்ணையாளர்கள் திட்டம்

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளன தலைவர் சுப்பிரமணியன் நாமக்கல்லில் பேட்டி

சத்துணவு முட்டை டெண்டரை கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்க கோரிக்கை

கிறிஸ்டி நிறுவனத்தைவிட முட்டையை விலை குறைவாக அளிக்கத் தயார்

1:26 PM, 18 Jul

லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார்

காங்., மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது

காங் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா தீர்மானம் கொண்டு வந்தார்

1:08 PM, 18 Jul

அருப்புக்கோட்டையில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை

நேற்று சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் தொடக்கம்

செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை

30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை

12:47 PM, 18 Jul

மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு

லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தீர்மானத்தை ஏற்றார்

நம்பிக்கை இல்லா தீீர்மானம் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விடப்படும்

12:27 PM, 18 Jul

சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை: நீதிபதி இந்திரா பானர்ஜி

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பலாத்காரம் வழக்கு

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை

12:14 PM, 18 Jul

சேலம் அருகே சீமான் கைது

8 வழிச்சாலை குறித்து மக்களிடம் குறை கேட்டபோது கைதானார்

சேலம் அருகே கூமாங்காடு என்றஇடத்தில் சீமான் கைது

11:51 AM, 18 Jul

சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சட்டபடி தண்டனை- ஹைகோர்ட்
11:50 AM, 18 Jul

ஆர்.கே. நகரில் மதுசூதனன் – டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்

அதிமுக மதுசூதனன் – ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மோதல்

11:33 AM, 18 Jul

இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அபராதம் செலுத்திவிட்டால் செய்த தவறு சரியாகிவிடுமா?

பாரதிராஜா வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசியதற்காக வழக்கு

பாரதிராஜா விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் பாரதிராஜாவுக்கு இல்லையா?

11:26 AM, 18 Jul

லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அமளி

விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதிக்காததால் அமளி

11:16 AM, 18 Jul

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்வி சேகர் ஆஜர்
11:15 AM, 18 Jul

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஆஜர்
11:07 AM, 18 Jul

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
10:23 AM, 18 Jul

மூச்சு குழாய் மாற்று சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனை செல்கிறார் கருணாநிதி

கருணாநிதிக்கு டிரகியாஸ்டமி கருவி 4வது முறையாக மாற்றப்படுகிறது

9:54 AM, 18 Jul

திருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்

தனியார் விடுதி மேலாளர் உட்பட 3 பேர் கைது

9:54 AM, 18 Jul

நாளை மறுநாள் முதல் லாரிகள் ஸ்ட்ரைக்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஸ்ட்ரைக்

READ MORE

English summary
85% of Marking of land works for Salem 8 lane road are over, says CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X