For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்து தண்டனை... பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடூரம்

அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகள் ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்து தண்டனை...வீடியோ

    கவுகாத்தி: அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகள் ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இட்டா நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் மாணவிகள் செய்த சிறிய தவறு ஒன்றிற்காக இந்த கொடூரமான தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தண்டனையை மூன்றும் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவிகளுக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அருணாசல பிரதேசத்தில் இருக்கும் அந்த பள்ளி மிகவும் புகழ்பெற்ற பள்ளியாகும்.

    தற்போது அந்த ஆசிரியர்களின் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. மேலும் அனைவரிடமும் இதுகுறித்த வாக்குமூலம் வாங்கப்பட்டு இருக்கிறது.

    மாணவிகளுக்கு தண்டனை

    மாணவிகளுக்கு தண்டனை

    அருணாசல பிரதேசத்தின் இட்டா நகரில் இருக்கிறது 'கஸ்தூரிபா காந்தி பாலிக்க வித்தியாலயா' என்ற அந்த புகழ்பெற்ற பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் 8 மற்றும் 7ம் வகுப்பு மாணவிகள் 88 பேருக்கு மிகவும் மோசமான தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அந்த மாணவிகள் அனைவரும் மற்ற பள்ளி மாணவிகள் முன்னிலையில் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொடூரமான செயலை அந்த பள்ளியில் நிரந்தர பணியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சிக்கு வந்திருக்கும் ஒரு ஆசிரியரும் சேர்ந்து செய்துள்ளனர்.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    அந்த பள்ளியில் படிக்கும் எதோ ஒரு மாணவியை பற்றியும், அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றியும் தவறாக யாரோ லெட்டர் எழுதி இருக்கிறார்கள். அந்த லெட்டர் 7ம் வகுப்பிற்கு, 8ம் வகுப்பிற்கு இடையில் தரையில் கிடந்து இருக்கிறது. இதை எழுதியது யார் என்று தெரியாததால் இரண்டு வகுப்பிலும் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் சேர்த்து தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

    தாமதமான புகார்

    தாமதமான புகார்

    இந்த சம்பவம் குறித்து மாணவிகள் யாரும் வெளியில் வாய் திறக்க கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை அந்த 88 மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அருணாசல பிரதேச பள்ளி கல்வித்துறையிடம் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    போலீஸ் நடவடிக்கை

    போலீஸ் நடவடிக்கை

    இவர்கள் மீதான புகார் இட்டா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்த ஆசிரியர்கள் மீது தற்போது வழக்கும் பதியப்பட்டு இருக்கிறது. இன்று மாலைக்குள் அந்த மூன்று பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று இட்டா நகர் பகுதியின் உதவி காவல் ஆணையர் கூறியுள்ளார்.

    English summary
    88 school girls have forced to undress as punishment Iin Arunachal Pradesh school. They have punished for writing bad things about their head master.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X