For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சார் நான் செத்துட்டேன்.. லீவு வேணும்.. இதை விட அந்த எச்.எம் அப்ரூவல் கொடுத்தார் பாருங்க.. அதுதான்!

தான் இறந்துவிட்டதாக கூறி பள்ளி மாணவன் லீவு லட்டர் தந்துள்ளான்

Google Oneindia Tamil News

கான்பூர்: "சார்.. நான் இன்னைக்கு காலைல செத்து போயிட்டேன்.. எனக்கு அரைநாள் லீவு வேணும்" என்று கேட்டுள்ளார் ஒரு மாணவர்! இந்த லீவு லட்டர்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே செத்து போன பாட்டியையே திரும்ப திரும்ப சாகடித்து லீவு கேட்ட காலம் அன்று இருந்தது. இல்லாத பாட்டி, தாத்தா இறந்துவிட்டதாக, சாகடித்து லீவு கேட்ட காலம் போய், இன்று தானே இறந்துவிட்டதாக சொல்லி லீவு கேட்க ஆரம்பித்து விட்டனர்.

8th std students own death leave letter to the principal

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவன் 8-ம் வகுப்பு படிக்கிறான். ஸ்கூலில் ரொம்ப கண்டிப்பு போல. அதனால்தான் அரைநாள் லீவு வேண்டும் என்று கேட்டு தலைமை ஆசிரியருக்கு லீவு லட்டர் தந்து பெர்மிஷன் கேட்டுள்ளான்.

அந்த லீவு லட்டரில்,"சார்.. நான் இன்று காலை 10 மணிக்கு இறந்துவிட்டேன். அதனால் சீக்கிரமாக வீட்டிற்கு போக வேண்டும். அதற்கு அரைநாள் லீவு வேண்டும்" என்று எழுதியிருந்தான். அதாவது பாட்டி இறந்துவிட்டதாக சொல்லி லீவு எடுப்பதுதான் பிளான். ஆனால் தானே இறந்துவிட்டதாக எழுதிவிட்டான்.

திருப்பூர் ரோட்டில் திகில் சம்பவம்.. திமுக பிரமுகரை வழிமறித்து.. விரட்டி விரட்டி..உறைந்துபோன மக்கள்திருப்பூர் ரோட்டில் திகில் சம்பவம்.. திமுக பிரமுகரை வழிமறித்து.. விரட்டி விரட்டி..உறைந்துபோன மக்கள்

மாணவன்தான் ஏதோ கோளாறில் எழுதிவிட்டான் என்றால், ஸ்கூல் எச்.எம். அதற்கு மேல் இருக்கிறார். இந்த லட்டரை படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு தந்து அனுமதி தந்துவிட்டார்.

மாணவரின் இந்த லீவு லட்டர்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலர் இதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும், சிலர் அந்த எச்.எம்-முக்கு கண்டனங்களை சொல்லி வருகிறார்கள்.

English summary
In Kanpur, 8th Std student leave apply for his own death to School Principal and this leave letter viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X