For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடி காட்டும் ஜெகன்மோகன்... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்... விவசாயிகள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்

    அமராவதி: ஆந்திரா மாநில முதலமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து, ஜெகன்மோகன் பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். அந்த வகையில், இரண்டாவது முறையாக, விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

    தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ 50,000 நிதி உதவி அளிக்கப்படும் என ஒய் எஸ் ஆர் கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதாவது நான்கு ஆண்டுகளில் தலா ரூ.12,500 ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் வழங்கப்படும். மேலும் வட்டியில்லா கடன்கள், முதல் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு இலவச நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

    ரூ 4,000 கோடி பேரிடர் நிவாரண நிதி, பகல் பொழுதில் 9 மணி நேர இலவச மின்சாரம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் இலவச குளிர் பதன கிடங்குகள், உணவு பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளின் நலன் பொருட்டு செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இதே போல், 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

    பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக! பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக!

    9 மணி நேரம் மின்சாரம்

    9 மணி நேரம் மின்சாரம்

    தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, சொன்னப்படி, விவசாயிகளுக்காக 'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார். இப்போது இரண்டாவது முறையாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் பகலில் 9 மணி நேரம் மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி

    விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி

    மேலும், இரவில் 7 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால், பலர் பாம்புக் கடி, விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் 9 மணி நேரம் இரவிலும் மின்சாரம் இனி வழங்கப்படும். இதற்காக அரசு ரூ.1,700 கோடியை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்து ஆந்திர விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    அதிரடி நடவடிக்கை

    அதிரடி நடவடிக்கை

    முன்னதாக, பதவியேற்றதும், முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

    மதுவிலக்கு

    மதுவிலக்கு

    இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார். மதுவிலக்கை அமல்படுத்துவதன் முதன் கட்டமாக சட்டத்துக்கு புறம்பான மதுக்கடைகளை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Andhra Pradesh Chief Minister Jagan Mohan Reddy Announce that 9 hours of electricity will be provided to farmers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X