For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது... 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. 4 இணை அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் தவிர புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார்,ஹர்தீப் சிங் புரி,கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

9 new ministers inducted in Modi cabinet

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014 மே மாதம் பதவியேற்றது. இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக ஞாயிறன்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இதுவரை 72 அமைச்சர்கள் இருந்தனர். லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்களை நியமிக்கலாம். புதிய அமைச்சர்கள் 9 பேரையும் சேர்த்து தற்போது 81 அமைச்சர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அமைச்சரவை மாற்றத்தை முடித்த கையோடு இன்று மாலை பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்கிறார். அங்கு பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

English summary
9 new ministers have been inducted in PM Modi led union cabinet today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X