For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகோதர பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன்.... மோடிக்கு ராக்கி கட்டிய 103 வயது பாட்டி

சகோதர பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 103 வயது பாட்டி ராக்கி கட்டினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: வடமாநிலங்களில் சகோதர-சகோதரி பாசத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு 103 வயது பாட்டி ராக்கி கட்டினார்.

ரக்ஷா பந்தன் என்பது, ஆடி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.

A 103-Year-Old tied Rakhi To PM Narendra Modi

இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு இன்று வடமாநிலங்களில் ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற பள்ளிக் குழந்தைகள் நரேந்திர மோடிக்கு ராக்கி கயிறு கட்டினர்.

A 103-Year-Old tied Rakhi To PM Narendra Modi

50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது சகோதரர் நினைவாக மோடிக்கு ராக்கி கட்ட வேண்டும் என 103 வயது மூதாட்டி ஸ்ரபதி தேவி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில் இன்று அந்த மூதாட்டியை தனது அலுவலகத்துக்கு மோடி அழைத்தார்.

அங்கு வந்த அந்த மூதாட்டி நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டினார். இதனால் மூதாட்டி மகிழ்ச்சி அடைந்தார். உடன்பிறந்த சகோதரி இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக ரக்ஷாபந்தன் அன்று குழந்தைகளை வரவழைத்து கொண்டாடி வருகிறார். ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் கடந்த மாதம் நரேந்திர மோடிக்கு ராக்கிக் கட்டினார்.

English summary
103 years old Shrabati Devi who missed her brother before 50 years today tied rakhi to Narendra Modi. She looked happy as she tied him a rakhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X