For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 வயசு ஆசை 105 வயசில் நிறைவேறியது.. 4ம் வகுப்பு தேர்வில் அசத்திய பாட்டி.. அதிலும் கணக்கு பாடத்தில்!

Google Oneindia Tamil News

கொல்லம்: கேரளாவில் 105 வயது பாட்டி, 4ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தனது பல நாள் கனவை நினைவாக்கி உள்ளார் நாட்டிலேயே வயதான மாணவியான அந்த பாட்டி.

வாழ்க்கை அழகான வண்ண கோலம்.அதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை அவரவர் விரும்புகிறார்கள். சிலர் அந்த கோலத்தை அலங்கோலம் ஆக்கிவிடுகிறார்கள். சிலர் அதை அழகாக உருவாக்குகிறார்கள். வாழ்க்கையில் தவறவிட்ட வாய்ப்புகளை மீண்டும் தேடிபிடித்து அதில் வெற்றி பெறுவது இந்த பிறவியின் அர்த்தம் என உணர்கிறார்கள்.

அப்படித்தான் கேரளாவில் நூற்றாண்டை கடந்து வாழும் பாட்டி பாகீரதி அம்மா, கடந்த ஆண்டு கொல்லத்தில் மாநில கல்வி கற்க வேண்டும் என்று ஆசையுடன் தேர்வு எழுத வந்தார். இதன் விளைவாக கடந்த புதன்கிழமை வெற்றி பெற்றுள்ளார். கல்வி அறிவையும் பெற்றுள்ளார்.

படிக்க முடியவில்லை

படிக்க முடியவில்லை

வயதான பெண்மணியான பாகீரதி அம்மா. எப்போதுமே படிப்பதற்கும் அறிவைப் பெறுவதற்கும் ஏங்கிக்கொண்டிருந்தார். தன் இளைய உடன்பிறப்புகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால், தாய் இறந்த பிறகு தன்னுடைய கல்வி கனவை விட்டுவிட வேண்டியிருந்தது. பாகீரதி அம்மாவின் துரதிஷ்டம் தனது முப்பதுகளில் ஒரு விதவையாகி, தனது ஆறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. இப்படி விதி மற்றொரு அடியை அவருக்கு கொடுத்து. அத்துடன் அவரது வயது காரணமாக, தேர்வுகளை எழுதுவதில் சிரமப்பட்டார். இறுதியில் கடந்த ஆண்டு தேர்வு எழுத விரும்பினார்.

105வயதில் நிறைவேற்றம்

105வயதில் நிறைவேற்றம்

இப்போது கஷ்டப்பட்டு படித்து, 4ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சுற்றுச்சூழல், கணிதம் மற்றும் மலையாளம் தொடர்பான 3 வினாத்தாள்களை முடிக்க அவருக்கு மூன்று நாட்கள் ஆனது என கல்வி அதிகாரிகள் கூறினர். 9 வயதில் மூன்றாம் வகுப்பில் முறையான கல்வியை கற்காமல் வெளியேறி பாகீரதி அம்மா, இன்றுவரை கேரள மாநில எழுத்தறிவு மிஷன் திட்டத்தில் இணைந்து மிகப் பழமையான 'சமநிலைக் கற்றவர்' ஆனார். அவர் மொத்தம் 275 மதிப்பெண்களில் 205 மதிப்பெண்களைப் பெற்றார். கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றார்.

அடுத்த இலக்கு

அடுத்த இலக்கு

பாகீரதி அம்மாவுக்கு ஆறு குழந்தைகளில் ஒருவர் மற்றும் அவரது 15 பேரக்குழந்தைகளில் 3 பேர் இல்லை இப்போது உயிருடன் இல்லை. இந்த பாட்டிக்கு தறபோது 12 பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளு பேரப்பிள்ளைகைள் உள்ளனர். 4வது தேர்வில் வெற்றி பெற்ற பாகீரதி அம்மாவை எழுத்தறிவு திட்ட இயக்குனர் பிஎஸ் ஸ்ரீகலா அவரை கொல்லம் வந்து வாழ்த்தினார்.பாகீரதி அம்மா அப்போது பேசுகையில், தான் 10ம் வகுப்பு தேர்வை எழுத ஆர்வமாக உள்ளேன் என்றார்.

100க்கு 98 மார்க்

100க்கு 98 மார்க்

மொத்தம் 11,593 பேர் கேரளாவில் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் 9,456 பெண்கள் உட்பட 10,012 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தின் முதன்மை திட்டமான "அக்ரா லக்ஷம்" இல் கீழ் அக்டோபர் 2018 இல் அரசு நடத்திய தேர்வில், 96 வயதான கார்த்தியானி அம்மா 100 இல் 98 மதிப்பெண்களைப் பெற்றார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக மாறி அசத்தினார்.

English summary
A 105-year-old great grandmother Bhageerathi Amma from kollam, who clear fourth standard equivalency examination in kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X