For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பப்பா இது உடம்புதானா.. உடம்பை வில்லாக வளைத்து உலக சாதனை படைத்த 13 வயது சிறுமி!

மைசூரில் 13 வயது சிறுமி ஒருவர் உடம்பை வில்லாக வளைத்து கடினமான யோகா செய்தியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மைசூர்: 13 வயது சிறுமி ஒருவைர் உடம்பை வில்லாக வளைத்து தொடர்ந்து 15 நிமிடம் யோகா செய்துள்ளார். அவரது இந்த சாதனை உலக சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக யோகா ஆர்வம் முதியவர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தொடர்ந்து 15 நிமிடம் யோகா செய்திருக்கிறார். அவரது இந்த சாதனை உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

கோல்டன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு

கோல்டன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரா. இவரது 13 வயது மகள் குஷி. இவர்கள் மைசூர் ஆபிஐ நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கோல்டன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு உலக சாதனை புத்தகதில் இடம்பெறுவதற்கான யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நீராலம்பா பூரன சக்ராசனா

நீராலம்பா பூரன சக்ராசனா

இதில் கலந்துகொண்ட குஷி எதையும் பிடிக்காமல், எந்த பேலன்ஸும் இன்றி பின்பக்கமாக உடலை வளைத்தும் எழுந்தும் நீராலம்பா பூரன சக்ராசனா செய்தார். கொஞ்சமும் இடறாமல், அலுத்துக்கொள்ளாமல் 15 நிமிடம் வரை குஷி தொடர்ந்து இந்த யோகாசனத்தை செய்தார்.

15 நிமிடத்தில் 15 முறை

15 நிமிடத்தில் 15 முறை

வழக்கமாக 15 நிமிடத்தில் 13 முறைதான் இந்த ஆசனத்தை பயிற்சியின் போது செய்வாரம் குஷி ஆனால் உலக சாதனை நிகழ்ச்சியின் போது 15 முறை செய்துள்ளதாக அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை அந்த அமைப்பின் ரெப் சந்தோஷ் அகர்வால் குஷியிடம் வழங்கினார்.

3 ஆண்டுகளுக்கும்...

முன்னர் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த குஷி இந்த யோகா பயிற்சிக்கு பிறகு நலம் பெற்றுள்ளதாகவும் அவரது தந்தை கூறியுள்ளார். உலக சாதனைக்கு சொந்தக்காரரான குஷி கடந்த 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே யோகாவை பயிற்சி பெற தொடங்கினாராம்.

குவித்துள்ள பதக்கங்கள்

குவித்துள்ள பதக்கங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக யோகாப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற 4 போட்டியில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 13-year-old girl has set a new world record after performing toughest yogasanas 15 times in a minute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X