For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 கோடி ரூபாய் சொத்தை தூக்கி எறிந்துவிட்டு சன்னியாசி ஆன ஜெயின் இளைஞர்

Google Oneindia Tamil News

காந்தி நகர்: அகமதாபாத்தில் 100 கோடி ரூபாய் சொத்தை விட்டுவிட்டு இளைஞர் ஒருவர் சன்னியாசியான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் 22 வயதான மோகேஷ் ஷெத். சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் முடித்துள்ளார். இவரது குடும்பத்தினர் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த தீஸா நகரை பூர்விகமாக கொண்டிருந்தனர்.

A 24 year old Chartered account gave up 100 crore business became monk

ஆனால் தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்கள் அலுமினியம் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

மோகேஷ் ஷெத் கடந்த 2 ஆண்டுகளாக தங்களின் குடும்ப தொழிலை கவனித்து வந்தார். இந்நிலையில் துறவறத்தில் ஆர்வம் கொண்ட அவர், இன்று காந்திநகரில் நடைபெற்ற விழாவில் ஜைன மத துறவியானார்.

ஜைன மத துறவியானதால் தனது குடும்பத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தையும் தனது லக்ஸரி வாழ்க்கையையும் துறந்துள்ளார். இன்று முதல் மோகேஷ் ஷேத் கருணபிரேம்ஜி என்று அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுதான் சூரத்தை சேர்ந்த வைரவியாபாரி ஒருவரின் 12 வயது மகள் பவ்யா ஷா துறவறம் பூண்டார். கடவுள் காட்டும் உண்மை வழியில் செல்வது மகிழ்ச்சி என அவர் கூறினார்.

English summary
A 24-year-old chartered accountant belonging to Jain family has embraced monkhood today. He has given up on his career and a family business worth over Rs. 100 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X