For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருவாயூர் கோவிலில் பக்தர்கள் பரவசத்தால் மிரண்ட யானைகள்.. பாகன் பரிதாப பலி!

புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி ஊர்வலத்தின் போது பக்தர்கள் போட்ட சத்தத்தால் யானை மிரண்டு தாக்கியதில் பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    குருவாயூர் கோவிலில் பக்தர்கள் பரவசத்தால் மிரண்ட யானைகள்.. பாகன் பரிதாப பலி!- வீடியோ

    திருவனந்தபுரம்: புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி ஊர்வலத்தின் போது பக்தர்கள் போட்ட சத்தத்தால் யானை மிரண்டு தாக்கியதில் பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 'கிருஷ்ணன், ரவி கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன்' ஆகிய பெயர்கள் கொண்ட மூன்று யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    யானைகள் மீது ஊர்வலம்

    யானைகள் மீது ஊர்வலம்

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு, 'கிருஷ்ணன், ரவி கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன்' ஆகிய பெயர்கள் கொண்ட மூன்று யானைகள் சாமி சிலைகளை ஏந்தியபடி கோவில் வளாகத்திற்குள் ஊர்வலமாக சென்றன.

    பரவசமடைந்த பக்தர்கள்

    பரவசமடைந்த பக்தர்கள்

    ஐயப்பன் சன்னதி அருகே கிருஷ்ணன் யானை பின்னால் சென்ற பக்தர்கள் சத்தம் போட்டபடி சென்றனர். பக்தர்களின் சத்தத்தால் கிருஷ்ணன் என்ற யானை மிரண்டது.

    மிரண்டு ஒடிய யானைகள்

    மிரண்டு ஒடிய யானைகள்

    இதனால் மற்ற இரண்டு யானைகளும் மிரண்டு ஓடின. யானைகள் மிரளுவதை கண்ட பக்தர்கள் நாலாபுரமும் சிதறி ஓடினர்.

    2 பேர் காயமடைந்தனர்

    2 பேர் காயமடைந்தனர்

    இதில் தேவகி அம்மாள் என்ற 63 மூதாட்டி மற்றும் ஹரி என்ற 12 வயது சிறுவன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் ரவி கிருஷ்ணன் யானையை பாகன்கள் அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    பலியான பாகன்

    பலியான பாகன்

    எனினும், யானை தாக்கி சுபாஷ் என்ற 37 வயதுடைய பாகன் உயிரிழந்தார். சாமி சிலைகளை தாங்கி இருந்த கோபி கிருஷ்ணன் யானை மிரண்டு ஓடிய போது அதன் மேல் இருந்த ஹரி நம்பூதிரி விளக்கு கம்பத்தை பிடித்து தொங்கி உயிர் தப்பினார்.

    குருவாயூர் கோவிலில் பரபரப்பு

    குருவாயூர் கோவிலில் பரபரப்பு

    மூன்று யானைகளும் சிறிது நேரத்திற்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன. இந்த சம்பவத்தால், குருவாயூர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Elephant feared in Guruvayur temple by devotees noise. A 37 year mahout killed by the elephant in the temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X