For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக் யூனியன் பிரதேசமானதை வரவேற்கும் மக்கள்.. முதல்முறையாக தேசியக் கொடியேற்றத்தை வரவேற்று பேனர்!

Google Oneindia Tamil News

லடாக்: லடாக் பகுதியில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி வரவேற்று அப்பகுதி மக்கள் பேனர் வைத்துள்ள சம்பவம் அவர்களின் விருப்பம் என்ன என்பதை காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்.

மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனால் இனி ஜம்மு காஷ்மீருக்கு தனிக் கொடி இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 370 சட்டப்பிரிவுக்கு பின்னர் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கம் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கம்

ஆளுநர் கொடியேற்றம்

ஆளுநர் கொடியேற்றம்

இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஷேர் இ காஷ்மீர் ஸ்டேடியத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். அதுபோல் லடாக்கில் உள்ள லே பகுதியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

நாடித் துடிப்பு

நாடித் துடிப்பு

லடாக் லே பகுதியில் முதல் முறையாக சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறுவதை வரவேற்று அப்பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர். 370 சட்டப்பிரிவு நீக்கம், யூனியன் பிரதேசமாக பிரிப்பு ஆகியவற்றுக்கு அப்பகுதி மக்களின் கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த பேனர் பல அப்பகுதி மக்களின் நாடித் துடிப்பை காட்டுகிறது.

தனிக்கொடி

தனிக்கொடி

மிகவும் பதற்றமான பூமியான ஜம்மு காஷ்மீரில் தனிக் கொடி பறந்து வந்த நிலையில் முதல்முறையாக தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. முன்னதாக லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

மகிழ்ச்சி

அவர் கூறுகையில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இந்த சுதந்திர தினம் மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகும். லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். லடாக் யூனியன் பிரதேசத்தில் முதல்முறையாக சுதந்திர தினம் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

English summary
Ladakh people happy as they celebrate first Independence Day after announced as Union Territory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X