For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீல உடையில் வந்த பெண் யார்? ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலான தேர்தல் பணியாளர்.. ஏன் தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல் பணியாளர் ஒருவர் இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Yogeshwari Gohite | Reena Dwivedi | தேர்தல் நேரத்தில் இணையத்தை கலக்கும் இரண்டு பெண்கள்- வீடியோ

    போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட தேர்தல் பணியாளர் ஒருவர் இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறார்.

    போபாலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவுடன் சேர்த்து இந்த தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தல் மத்திய பிரதேசத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

     A Bhopal election worker became viral after her photo in blue dress

    ஏனென்றால் பாஜகவின் வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்குர் மற்றும் காங்கிரசின் திக் விஜய் சிங் இங்கு போட்டியிட்டனர். ஆனால் இவர்களுக்கு இடையிலும் கூட, இந்த தொகுதியை சேர்ந்த தேர்தல் பணியாளர் ஒருவர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

    போபாலில் கோவிந்தபுராவில் உள்ள ஐஐடியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் இந்த பெண் அதிகாரி பணியாற்றி வந்தார். இவர் பெயர் யோகேஷ்வரி கோகித். கனரா வங்கியில் பணியாற்றும் இவர் அங்கு தேர்தல் பணியாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

     A Bhopal election worker became viral after her photo in blue dress

    இவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் நடந்து வந்த புகைப்படம்தான் வைரலாகி இருக்கிறது. இந்த பெண் அணிந்து இருக்கும் வெண் நீல நிற உடை இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதையடுத்து பலரும் யார் இந்த பெண், யார் இந்த பெண் என்று தேடி கடைசியில் அவரின் பேஸ்புக் பக்கத்தையே கண்டுபிடித்துவிட்டனர்.

    இவரின் உடையும், இவர் தேர்தல் பணிகளை செய்த விதமும் அங்கு பலரை கவர்ந்துள்ளது. தேர்தலின் போது வாக்களிக்க வந்த சிலர் கூட இவருடன் செல்பி எடுக்க துடித்து இருக்கிறார்கள். ஒரே நாளில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பல்லாயிரம் எண்ணிக்கையில் பின் தொடர்பாளர்கள் அதிகரித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    செம வெயிலு.. கூலிங் கிளாஸுடன் ஒட்டபிடாரத்தை வலம் வந்த ஸ்டாலின்.. ஜில் ஜில் பதநீர் அருந்தி பிரச்சாரம் செம வெயிலு.. கூலிங் கிளாஸுடன் ஒட்டபிடாரத்தை வலம் வந்த ஸ்டாலின்.. ஜில் ஜில் பதநீர் அருந்தி பிரச்சாரம்

    வடஇந்தியாவில் சில தொலைக்காட்சிகளுக்கு இவர் பேட்டியும் அளித்துள்ளார். இவரை பார்க்க அந்த வாக்குச்சாவடி வெளியே பலர் காத்து இருந்த நிகழ்வும் தேர்தல் அன்று நடந்துள்ளது.

    ஒரே நாளில் வைரலான இவர் தற்போது இணையத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இவரை தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    English summary
    She is a celebrity now, A Bhopal election worker became viral after her photo in blue dress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X