
கோவா பீச்சில் நடந்த கொடுமை.. மசாஜ் செய்வதாக.. காதலன் கண்முன்பே பிரிட்டீஷ் பெண் பலாத்காரம்
பானஜி : கோவாவில் சுற்றுலாவுக்காக வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவர் அவரது ஆண் காதலனின் கண்முன்னே கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவாவுக்கு கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள். உள்ளூர் காதலர்களும் இங்குள்ள கடற்கரைக்கு வருவது உண்டு.
குறிப்பாக தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரை பகுதியில் ஏராளமான காதலர்கள் வருவது வழக்கம்.
ஹைதராபாத் கூட்டு பலாத்காரம்! மைனர் சிறுமி படத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ சொன்ன விளக்கம் என்ன தெரியுமா

கோவாவில் அதிர்ச்சி
இந்நிலையில் கோவாவில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே பிரிட்டிஷ் பெண் ஒருவரை மசாஜ் செய்வதாகக் கூறி முன்னாள் நூலகர் ஒருவர் இளம்பெண்ணின் ஆண் நண்பரின் கண் முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான வின்சென்ட் டிசோசா என்பவர், கோவா வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அரம்போல் கடற்கரைக்கு அருகே சட்டவிரோதமாக மசாஜ் சேவைகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த காலத்தில் பள்ளி நூலகராகவும் பணிபுரிந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசில் புகார்
இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து கோவா சுற்றுலா சென்றுள்ள நடுத்தர வயதுப் பெண் காவல்துறையில் அளித்த புகாரின்படி, கடற்கரைக்கு அருகே உள்ள ஸ்வீட் வாட்டர் ஏரியின் அருகே படுத்திருந்தபோது, மசாஜ் செய்வதாகக் கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்ற வின்சென்ட் டிசோசா , அங்கு அவரது நண்பரை மிரட்டி கட்டிப் போட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதிரடி கைது
குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் ஜூன் 2 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த பெண் இங்கிலாந்தில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் உதவியை நாடிய பின்னர் திங்களன்று பெர்னெம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள்,பெர்னெம் போலீசார், நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.