For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூஸை இலவசமா தரலைன்னு அக்கப்போரு... மல்லுக்கட்டு சண்டையில் டெல்லி இளைஞர் பலி!

டெல்லியில் இலவசமாக ஜூஸ் தரவில்லை என்று கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டவர்களால் உதவிக்கு வந்த இளைஞர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இலவசமாக ஜூஸ் தரவில்லை என்று தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தடுப்பதற்காக உதவிக்கு வந்த கடைக்காரரின் நண்பரும், சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஊழியருமான கோவிந்த் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் கோவிந்த் என்பவர் 3 பேர் தாக்கியதில் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரையும் முன்னர் தாக்குதலுக்கு ஆளான கோவிந்த் அருகில் இருந்த இந்து ராவ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய இதயத்தில் பலமுறை பலமான அடி விழுந்ததால் இதயம் செயல்பாட்டை இழந்து கோவிந்த் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எதற்காக இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று போலீசார் அந்தப் பகுதியல் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

ஆதர்ஷ் நகர்ப் பகுதியில் சந்தோஷ் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார். அவருடைய கடைக்கு வந்த இரண்டு பேர் ஜூஸை இலவசமாகத் தரும்படி சண்டையிட்டுள்ளனர், அதற்கு சந்தோஷ் மறுத்துள்ளார்.

நண்பர்களோடு வந்து தகராறு

நண்பர்களோடு வந்து தகராறு

இதனையடுத்து சந்தோஷை அவர்கள் தரக்குறைவாக திட்டியதோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். அன்று மாலையே அந்த 2 நபர்களும் தன்னுடைய நண்பர் சாகர் என்பவருடன் அதே கடைக்கு மீண்டும் வ்நது சந்தோஷிற்கு பாடம் கற்பிக்க நினைத்துள்ளனர்.

உதவிக்காக அழைக்கப்பட்ட கோவிந்த்

உதவிக்காக அழைக்கப்பட்ட கோவிந்த்

அந்த சமயத்தில் சந்தோஷின் நண்பர்கள் மகேஷ் மற்றும் சுமித் கடையில் இருந்துள்ளனர். ஜூஸை இலவசமாக தரவில்லை என்று சண்டைபோட்டவர்கள் மீண்டும் சண்டையிட வந்ததால் சந்தோஷின் நண்பர்கள் ரஜோரி கார்டன் பகுதியில் சிவில் பாதுகாப்பு ஊழியராக இருந்த கோவிந்தை உதவிக்கு அழைத்துள்ளனர்.

3 பேர் கைது

3 பேர் கைது

இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது மகேஷ் மற்றும் கோவிந்தை எதிர் தரப்பினர் பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தான் கோவிந்த மரணம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ், சந்தீப், சாகர் உள்ளிட்ட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

English summary
A civil defence staff was stabbed to death at Delhi over a fight of free juice, after the preliminary investigations police arrested 3 accustes who were invovled in the attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X