For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சீனியர் மோஸ்ட்' கேரளா ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பரமேஸ்வரனுக்கு பத்ம விபூஷண் விருது... தொடரும் சர்ச்சை

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பரமேஸ்வரனுக்கும் பத்ம விபூஷண் அறிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவின் மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான பரமேஸ்வரனுக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்திருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு இவ்விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

A controversy erupts over Padma Vibhushan award to RSS veteran Parameswaran

ஆனால் பத்ம விருதுகளில் பெரும்பாலானவை பக்கா இந்துத்துவா கோஷ்டியினருக்கே வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆண்டாள் விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்த நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளில் சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும் நாகசாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த பரமேஸ்வரனும் இடம் பிடித்துள்ளார். பாரதிய விஷார் கேந்திரா என்ற அமைப்பின் நிறுவனர் பரமேஸ்வரன்.

இவரது அடையாளமே கேரளாவின் மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்பதுதான். அதேபோல் கோவையைச் சேர்ந்த யோகாசன பாட்டி நானம்மாளுக்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. நானம்மாள் பாட்டியை சமூக வலைதளங்களில் இந்துத்துவா சக்திகள் கொண்டாடி வருவதும் சர்ச்சையாகி வருகிறது.

English summary
Senior most RSS pracharak from Kerala P Parameswaran has been selected to be conferred with the Padma Vibhushan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X