For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவனிக்கப்படாத ஒரு கடற்படை டைவிங் வீரரின் அனுபவம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொச்சி: கடற்படையில் டைவர்கள் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பங்களிப்பு வெளியே தெரியாமலே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான், தென் கடற்படை கமாண்ட் ஹரிதாஸ் குன்டு.

33 வயதான ஹரிதாஸ் குன்டு, ஒன்இந்தியாவிடம் தனது அனுபவங்களை இப்படி கூறுகிறார்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான், சிறு வயதிலேயே எங்கள் ஊரான கல்யண்கார் பகுதியிலுள்ள, குளத்தில், நீச்சல் அடித்தும், மீன் பிடித்தும் அனுபவம் கொண்டவன்.

A daredevil diver from Bengal who loves rasagulas & football

கடந்த 14 வருடங்களாக கடற்படையில் பணியாற்றி வருகிறேன். 12வது படித்து முடித்ததும், பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்தேன்.

அதுவரை, ஊரில் எங்கள் குடும்ப பிசினசான இனிப்பு தயாரிப்பில், தந்தைக்கு உதவிகரமாக இருந்தேன். ரசகுல்லா மற்றும் குலோப்ஜாமூன் எனக்கு பிடித்த இனிப்பு.

கடற்படையில், டைவிங் செய்வோர் மிகுந்த உடல் வலிமையோடு இருக்க வேண்டும். மனதும் உறுதியாக இருக்க வேண்டும். நீரில் மூழ்குவோரை காப்பாற்றுவோரை செல்லும்போது மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். பல வகைகளில் மூளையை ரெடியாக வைத்து இருக்க வேண்டும்.

2009ல், தேக்கடியில் படகு கவிழ்ந்த விபத்தில், 45 பேர் உயிரிழந்தனர். அப்போது, மீட்பு குழுவில் நானும் இணைந்து செயல்பட்டேன். சடலங்கள் ஏதும் இல்லை என்று முடிவாகும்வரை ஆற்றில் தேடி பார்த்த பிறகே மீட்பு பணியை முடித்தோம். இவ்வாறு ஹரிதாஸ் தெரிவித்தார்.

English summary
Haridas Kundu is a soft-spoken man, who mastered initial lessons in swimming at a village pond in Kalyangarh, West Bengal. "We had lots of fun along with friends learning swimming in the pond. I was in Class-III then and we used to regularly catch fish with the help of pots and pans," says the 33-year-old sailor, now posted at the Southern Naval Command (SNC) at INS Venduruthy in Kochi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X